திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

கழட்டி விடப்படும் ஏஆர் ரகுமான்.. ஆஸ்கர் நாயகனுக்கு இப்படி ஒரு நிலைமையா?

ஒரு காலகட்டத்தில் ஏ ஆர் ரகுமான் கால்சீட்டுக்காக கோலிவுட், டோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என அனைத்து சினிமாவும் காத்திருந்தது. ஒரு படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்தால் கண்டிப்பாக அந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் தான். ஆனால் தற்போது ரகுமானை சினிமா நிராகரித்து வருகிறது.

இரண்டு ஆஸ்கர்களை கையில் வைத்துக்கொண்டு எல்லா புகழும் இறைவனுக்கே என ஏ ஆர் ரகுமான் தமிழில் பேசியது பாலிவுட்டில் அதிர்வலையை ஏற்படுத்தியது. தொடர்ந்து பாலிவுட் படங்களுக்கு இசையமைத்து வந்த ஏ ஆர் ரகுமானுக்கு தற்போது அங்கு வாய்ப்பு குறைகிறது.

Also Read : பணத்தை வெறுத்து ஒதுக்கும் ஏ ஆர் ரகுமான்.. அதற்கு மட்டுமே சந்தோஷப்படும் ஆஸ்கர் நாயகன்

அமிதாப்பச்சன், அமீர்கான் என முன்னணி நடிகர்கள் ரகுமானுக்காக பல மணி நேரம் காத்திருந்து கால்ஷீட் வாங்கிவிட்டு செல்வார்கள். ஆனால் தற்போது அப்படியே தலைகீழாக உள்ளது. அதாவது ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் ஜவான் படத்தில் முதலில் ஏ ஆர் ரகுமான் தான் இசையமைப்பதாக இருந்தது.

ஆனால் தற்போது ஏ ஆர் ரகுமானுக்கு பதிலாக அனிருத் இசையமைப்பதாக கூறப்படுகிறது. இவ்வாறு பாலிவுட் நடிகர்கள் தொடர்ந்து ரகுமானை ஒதுக்கி வருகிறார்கள். இதனால் தற்போது இசைப்புயல் தமிழ் சினிமாவில் அதிக படங்களில் இசையமைத்து வருகிறார்.

Also Read : 10ம் நூற்றாண்டுக்கு அழைத்துச் சென்ற ஏஆர் ரகுமான்.. PS1 படத்திற்காக வாங்கப்பட்ட இசைக்கருவிகளின் லிஸ்ட்

சமீபத்தில் வெளியான விக்ரமின் கோப்ரா படத்திற்கு ஏ ஆர் ரகுமான் தான் இசையமைத்திருந்தார். அதுமட்டுமின்றி மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார். இப்படத்தில் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தில் இசை வெளியீட்டு விழா நாளை பிரம்மாண்டமாக நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற இருக்கிறது. பாலிவுட் நிராகரித்தாலும் தமிழ் சினிமா ரகுமானை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Also Read : ரகசியமாய் நடந்த திருமணம்.. ஒருத்தருக்கு மட்டும் பிரம்மாண்ட உபசரிப்பு செய்த ஏஆர் ரகுமான்

Trending News