வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

ரகுமான் ஆஸ்கர் வென்றது தெரியும்.. ஆனா, யாரையெல்லாம் ஓரங்கட்டி வாங்கினார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் இசை புயல் என்னும் அடையாளத்தோடு ஏராளமான இன்னிசை பாடல்களை கொடுத்து நம்மை மகிழ்வித்தவர் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான். தமிழ் சினிமாவை தொடர்ந்து அனைத்து மொழிகளிலும் இவர் தன் பாடல்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

இப்படி சினிமா துறையில் ஏராளமான வெற்றிகளை கண்ட அவருக்கு உலக சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்த ஒரு தமிழன் என்ற பெருமையும் உண்டு. கடந்த 2009 ஆம் ஆண்டு அவர் இசையமைத்த ஸ்லம் டாக் மில்லியனர் என்ற இந்தி திரைப்படத்திற்காக 2 ஆஸ்கர் விருதுகளை பெற்றார்.

அந்த வகையில் அவர் தமிழர்கள் உட்பட இந்தியர்கள் அனைவரையும் பெருமைப்படுத்தி, இசைத் துறையில் மாபெரும் சாதனையை நிகழ்த்தினார். இதனால் ஒட்டுமொத்த சினிமா உலகமும் அவரை கொண்டாடியது. இப்படிப்பட்ட ஒரு சாதனையை அவர் பல தடைகளை தாண்டி நிகழ்த்தியுள்ளார்.

இந்த ஆஸ்கர் விருதை பெறுவதற்கான நாமினேஷன் பட்டியலில் பல முன்னணி இசையமைப்பாளர்கள் இருந்தனர். உலகப் புகழ்பெற்ற ஹாரி பாட்டர் திரைப் படத்திற்கு இசையமைத்த அலெக்சாண்டர் டெஸ்ப்ளாட் மற்றும் பேட்மேன் த டார்க் நைட் திரைப்படத்திற்கு இசையமைத்த ஜேம்ஸ் நியூட்டன் ஹார்வேர்ட் அந்த பட்டியலில் இருந்தனர்.

மேலும் ஸ்பைடர்மேன் திரைப்படத்திற்கு இசை அமைத்த டேனி எல்ப்மேன் மற்றும் தி ஷாஷங் ரிடம்ப்ஷன் திரைப்படத்திற்கு இசையமைத்துள்ள தாமஸ் நியூமன் இவர்களுடன் ஏ ஆர் ரகுமான் இசையமைத்த ஸ்லம்டாக் மில்லியனர் திரைப்படமும் நாமினேஷன் பட்டியலில் இடம்பெற்றது.

இவர்கள் அனைவரும் அமெரிக்க புகழ்பெற்ற இசையமைப்பாளர்கள். இவர்களுடன் இந்தியரான ஏ ஆர் ரகுமான் போட்டியிட்டு இந்த விருதினை கைப்பற்றி இன்று ஒரு ஆஸ்கர் நாயகனாக வலம் வருகிறார்.

இவ்வாறு திரையுலகிற்கு பல பெருமைகளையும், புகழையும் தேடித் தந்த இசை புயல் இன்று தனது 55 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரைப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இசையில் பல புதுமைகளைப் படைத்த இந்த இசைப்புயல் இன்னும் பல சாதனைகளை செய்ய வேண்டும் என்பதே அனைவரின் ஆசை. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சார்.

Trending News