செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

2023ல் ரிலீஸுக்காக காத்திருக்கும் ஏஆர் ரகுமானின் 6 படங்கள்.. தவமாய் தவமிருக்கும் அயலான்

தமிழ் சினிமாவிற்கு கிடைத்த வரப்பிரசாதமாக பார்க்கப்படும் இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான், இசையுலகிலேயே புதுமையை செய்த பெருமைக்குரியவர். இவர் சினிமாவில் காலடி வைத்த பிறகு தான் மியூசிக்கில் பல வித்தியாசத்தை காண்பித்து ரசிகர்களை வியக்க வைக்கும் வித்தைகளை புரிந்தார். இதனால் இவர் இசையமைக்கும் ஒவ்வொரு படங்களையும் ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் எதிர் நோக்குவார்கள். அதிலும் 2023 ஆம் ஆண்டு இசைப்புயல் இசையமைத்த 6 படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆகிறது.

அயலான்: இன்று நேற்று நாளை பட இயக்குனர் ஆர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் வெளியாகும் இந்த படம், அறிவியல் புனைவு நகைச்சுவை திரைப்படமாக உருவாகியுள்ளது. இதில் சிவகார்த்திகேயன் விவசாயி மற்றும் வேற்று கிரகவாசியாக இரட்டை வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். ரிலீசுக்கு தயாராக இருக்கும் இந்த படத்தின் வெளியிடும் தேதியை பலமுறை மாற்றி அமைத்துள்ளனர். ஆனால் உறுதியாக 2023ல் ரிலீஸ் ஆகி விடும் என்பதால் ஏஆர் ரகுமான் இசையமைத்திருக்கும் இந்த படத்தினுடைய பாடல்களை கேட்பதற்கு ரசிகர்கள் தவமாய் தவம் இருக்கின்றனர்.

மாமனிதன்: மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்திருக்கும் மாமன்னன் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், இந்த படமும் 2023-ல் ரிலீஸுக்காக காத்திருக்கிறது. இந்த படத்திற்கு ஏஆர் ரகுமான் இசையமைத்திருப்பதால் படத்தைக் குறித்த எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் கொஞ்சம் அதிகமாகவே உள்ளது. இதில் உதயநிதியுடன் பகத் பாசில், வடிவேலு, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

Also Read: 30 வருடத்திற்கு முன்பே இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த ஏஆர் ரகுமான்.. வரலாற்றையே மாற்றி அமைத்த சம்பவம்

பத்து தல: மாநாடு, வெந்து தணிந்தது காடு, போன்ற 3 வெற்றிகளை கொடுத்த சிம்பு அடுத்ததாக பத்து தல படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். இந்த படம் வரும் மார்ச் 30ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில், படத்திற்கு ஏ ஆர் ரகுமான் தான் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் சிம்புவுடன் கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். படத்தை இயக்குனர் கிருஷ்ணா இயக்கியுள்ளார்.

பொன்னியின் செல்வன் 2: கடந்த வருடம் பொன்னியின் செல்வன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பொன்னியின் செல்வன் படத்தின் 2ம் பாகம் வரும் ஏப்ரல் 28-ம் தேதி ரிலீஸ் ஆகிறது. முதல் பாகத்தை இசையமைத்த ஏஆர் ரகுமான் தான் 2ம் பாகத்தையும் இசையமைத்திருக்கிறார். பொன்னியின் செல்வன் படத்தில் முதல் பாகத்தில் இடம்பெற்றிருந்த பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் அடித்த நிலையில் 2ம் பாகத்திலும் ஏஆர் ரகுமான் இசையில் வெளியாக இருக்கும் பாடல்களை கேட்பதற்கு ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர்.

Also Read: முழுக்க முழுக்க காப்பி அடித்த ராஜ மௌலி.. பொன்னியின் செல்வனை காப்பி அடித்த 5 கேரக்டர்கள்

கமல் 234: 35 வருடங்களுக்குப் பிறகு உலக நாயகன் கமலஹாசன் இயக்குனர் மணிரத்தினம் இருவரும் கமல் 234 படத்தில் இணைகின்றனர். தற்போது இந்தியன் 2 படப்பிடிப்பில் இருக்கும் கமல், அந்தப் படத்தை முடித்துவிட்டு மணிரத்தினம் படத்தில் படப்பிடிப்பில் தொடர உள்ளார். விரைவில் இந்தப் படத்தை எடுத்து இந்த வருடமே ரிலீஸ் செய்ய உள்ளனர். படத்திற்கு ஏஆர் ரகுமான் இசை அமைக்கிறார். எனவே கமல்-மணிரத்னம்-ஏஆர் ரகுமான் கூட்டணியில் உருவாகும் இந்தப் படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

லால் சலாம்: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் லால் சலாம் படத்தைக் குறித்த அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. இந்தப் படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தை ஏஆர் ரகுமான் தான் இசையமைக்கிறார். 2023 ஆம் ஆண்டு வெளியாக இருக்கும் இந்தப் படத்திற்கான படப்பிடிப்பும் தீவிரமாக நடைபெற்று கொண்டிருப்பதால், படத்தின் ரிலீஸ் தேதிக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

Also Read: டாப் ஹீரோக்களின் மார்க்கெட்டை குறைக்கும் 3 இயக்குனர்கள்.. மீள முடியாமல் தவிக்கும் சிவகார்த்திகேயன்

இவ்வாறு 2023 ஆம் ஆண்டு ஆஸ்கார் நாயகன் ஏஆர் ரகுமான் இசையில் உருவாகி இருக்கும் 6 படங்கள் அடுத்தடுத்து ரிலீசாக காத்திருக்கிறது. அதிலும் பல மாதங்களாக இப்போ அப்போ என ரிலீஸ் தேதியை மாற்றி அமைத்து அயலான் படத்திற்காக ஏங்க விட்டுள்ளனர்.

Trending News