சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

ஆம்புலன்சை விட வேகமாக வந்து உதவிய விஜய் டிவி பிரபலம்.. கண்ணீரில் மூழ்கிய பிபி ஜோடிகள்

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலங்கள் பங்குபெறும் பிபி ஜோடிகள் நிகழ்ச்சி ஞாயிறு இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இப்போட்டியின் நடுவர்களாக ரம்யா கிருஷ்ணன், நகுல் உள்ளனர். இப்பொழுது இப்போட்டி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

பைனல் எபிசோடுக்கு பிக்பாஸில் பங்கு பெற்ற ஓவியா, லாஸ்லியா, சாக்ஷி அகர்வால், அபிராமி ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்குபெற்றனர். ஈரோடு மகேஷ் மற்றும் தீனா தொகுப்பாளராக உள்ளனர். இந்நிகழ்ச்சியில் பங்குபெறும் ஒரு ஜோடி அறந்தாங்கி நிஷா, பாலாஜி. ஈரோடு மகேஷ் பற்றி நிஷா நெகிழ்ச்சியான தருணத்தை கூறி கண்கலங்கி உள்ளார்.

பிக் பாஸ் இல் இருக்கும் போதே தனது அறுபதே நாளான தனது குழந்தை கார் விபத்தில் காது பிஞ்சு விட்டதாக கூறி மிகவும் வருத்தபட்டிருப்பார். அறந்தாங்கி நிஷாவின் மகள் சபா கார் விபத்துக்குள்ளான போது ஈரோடு மகேஷுக்கு, அறந்தாங்கி நிஷா போன் செய்துள்ளார். அப்போது ஆம்புலன்ஸ் அந்த இடத்திற்கு செல்வதற்கு முன்பே ஆம்புலன்சை விட மிக வேகமாக வந்து மகேஷ் சென்று உதவி செய்தார்.

நிஷா அழுகையை நிறுத்தாமல் அழுது கொண்டே இருந்தாராம். அறந்தாங்கி நிஷாவிடம் இனிமேல் குழந்தை அழாது என்று ஈரோடு மகேஷ் ஆறுதல் கூறினாராம். அன்றிலிருந்து நிஷாவின் குழந்தை சிரித்துக் கொண்டே தான் இருக்கும்.

இந்த சம்பவத்தை கூறும்பொழுது நிஷாவால் கண்ணீரை கட்டுபடுத்த முடியவில்லை. இதை பார்த்த நடுவர்கள் ஆன ரம்யா கிருஷ்ணன் மற்றும் நகுல் இருவருமே அழுதனர். அனைத்து பிபி ஜோடிகளும் அழுதனர்.

erode-mahesh-1

அறந்தாங்கி நிஷா, ஈரோடு மகேஷ் தனது அண்ணன் என்றும் எனது மகள் சபா மாமாவிற்கு சீர் செய்ய ஆசைப்படுகிறாள் என்றும் கூறினார். ஈரோடு மகேஷ் மிகவும் இரக்ககுணம் உள்ளவர் . நிகழ்ச்சியின் மூலம் பெரும் பாராட்டையும் நல் மதிப்பையும் பெற்றுள்ளார்.

Trending News