வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

அச்சு அசல் வடிவேல் பாலாஜியாக மாறிய அறந்தாங்கி நிஷா.. கண் கலங்கிய விஜய் டிவி மேடை

விஜய் டிவியின் நயன்தாரா என்று தன்னைத் தானே சொல்லிக் கொள்பவர் அறந்தாங்கி நிஷா. மற்றவர்கள் தன்னை எவ்வளவு கலாய்த்தாலும் அதை பெரிதுபடுத்தாத நிஷாவுக்கு ரசிகர் பட்டாளம் நிறைய உண்டு.

பிக்பாஸ் சீசன் 4 ல் கலந்து கொண்டு பல கலவையான விமர்சனங்களை பெற்ற நிஷா, தற்போது விஜய் டிவி நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று வருகிறார். ஒரு நிகழ்ச்சிக்காக மறைந்த நடிகர் வடிவேலு பாலாஜி போல மேக்கப் போட்டுள்ளார் நிஷா.

இந்த போட்டோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. போட்டோவை பார்க்கும் பொழுது நிஷா அச்சு அசல் வடிவேலு பாலாஜி போலவே இருக்கிறார். இதைப் பார்க்கும் பலருக்கும் வடிவேல் பாலாஜியை நினைத்து கண் கலங்குவதை நிச்சயம் நாம் மறுக்க முடியாது.

இது குறித்து நிஷா கூறியதாவது, இந்த கெட்டப்பை செட்டுல பார்த்த ஒவ்வொருக்கும் ஒரு பக்கம் ரொம்ப சந்தோஷமாக இருந்தது. மேலும் பாலாஜி அண்ணா நாங்க எல்லாரும் உங்கள ரொம்ப மிஸ் பண்ணுவோம், மக்களை சந்தோஷபடுத்துவது மட்டும் தான் நம்ம வேலை, அதை எப்பவும் செஞ்சுக்கிட்டே இருப்போம் உங்கள் நினைவுகளோடு என்று கூறியுள்ளார்.

இதைப் பார்க்கும் ரசிகர்களும் வடிவேல் பாலாஜி என்றும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார் என்று கருத்துக்களை பதிவிடுகின்றனர்.

vadivel-balaji-nisha
vadivel-balaji-nisha

Trending News