வியாழக்கிழமை, நவம்பர் 14, 2024

அரங்கேற்றம் படத்தின் மூலம் ஜாதி ரீதியாக சவாலை சந்தித்த K.பாலசந்தர்.. எப்படி சமாளித்தார் தெரியுமா.?

பல முன்னணி நட்சத்திரங்களை சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியவர் தான் கே பாலசந்தர். ரஜினிகாந்த், கமலஹாசன், சரிதா, நாகேஷ், பிரகாஷ்ராஜ், விவேக் என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.

100-க்கும் மேல் படங்களுக்கு திரைக்கதை அமைத்து தமிழ்சினிமாவில் இன்று வரை ஒரு எடுத்துக்காட்டாக விளங்கி வருகிறார் கே பாலசந்தர். ஐம்பது வருடங்களுக்கு மேல் தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக வலம் வந்தவர்.

இவர் இயக்கிய அரங்கேற்றம் என்ற படத்தின் மூலம் பெரும் சர்ச்சையை சந்தித்தார். அதாவது உயர்ந்த ஜாதி பெண்ணை வேசியாக நடிக்க வைத்திருப்பார் கே.பாலசந்தர். இப்படி நடிக்க வைத்ததால் குடும்ப பெண்ணை இது போன்று சித்தரித்ததால் பெரும் சர்ச்சை கிளம்பியது.

ஜாதி ரீதியாக பல பிரச்சனைகளையும் சந்தித்து படத்தை சில இடங்களில் வெளியிட முடியாமல் நின்று போனதாம். இப்படியான சூழ்நிலையில் பாலச்சந்தர் இதற்கு விளக்கமளித்தார். அதாவது நானும் இதே ஜாதியை சேர்ந்தவர் தான் என்பது போன்றும் கூறியதற்கு பின் படம் வெளியிடப்பட்டது.

arangetram-movie
arangetram-movie

தன்னுடைய ஜாதியை வைத்து அந்த பெண்ணை வேசியாக  காட்டியதால் அப்போது உள்ள சூழ்நிலையில் பாலச்சந்தர் தப்பித்துக் கொண்டாராம். இதனால் ஜாதியை வைத்து சண்டையை கிளப்பி அவர்களை வாயடைக்கச் செய்தார் பாலச்சந்தர். இதைத் தவிர அவர் படத்தில் வரும் பாடல்களின் வரிகள் சாமானியர்களை கிண்டல் செய்வதாக பிரச்சனை வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -spot_img

Trending News