வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

அடித்துப் பிடித்து அரண்மனை3 படத்தின் சாட்டிலைட் உரிமையை பெற்ற சேனல்.. பரிதவித்து நிற்கும் சன் டிவி!

சுந்தர். சி இயக்கத்தில் கடந்த அக்டோபர் மாதம் வெளியான திகில் திரைபடமான அரண்மனை3 படமானது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தை தற்போது தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்வதற்கான சாட்டிலைட் உரிமையை கலைஞர் டிவி பெற்றுள்ளது.

பொதுவாக படம் ரிலீஸ் ஆன பிறகு அந்தப்படம் குறைந்த நாட்களுக்குள்ளேயே தொலைக்காட்சியில் ஒளிபரப்ப செய்து தங்களின் டிஆர்பியை அதிகரிக்க தனியார் தொலைக்காட்சிகள் திட்டமிடும். அந்த வகையில் சுந்தர். சி-யின் அரண்மனை3 திரைப்படத்தை கலைஞர் தொலைக்காட்சி ஒளிபரப்பு செய்து ரசிகர்களை தங்கள் பக்கம் ஈர்க்க முயற்சித்துள்ளது.

ஏனென்றால் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஜாலியாக பார்க்கக்கூடிய அரண்மனை3 படத்தில் ஆர்யா, ராசி கண்ணா, விவேக், யோகிபாபு, ஆண்ட்ரியா உள்ளிட்ட பல திரைப்பட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். எனவே சுந்தர். சி-யின் பிரதான படமான அரண்மனை சீரிஸ் எப்பொழுதுமே அவருக்கு கை கொடுக்கும் படமாகவே உள்ளது.

அரண்மனை முதல் பாகம் வெளியான பிறகு ஆம்பளை திரைப்படம் ரிலீஸ் ஆகி ரசிகர்களின் கிண்டலுக்கு ஆளானது. அதைப்போல் அரண்மனை இரண்டாவது பாகம் ரிலீஸாகி, அதன் பிறகு வெளியான ‘வந்தா ராஜாவா தான் வருவேன்’, ‘ஆக்சன்’ போன்ற திரைப்படங்கள் சுந்தர் சிக்கு எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை தரவில்லை.

இதைத்தொடர்ந்து அரண்மனை மூன்றாம் பாகம் ரிலீசாகி ரசிகர்களிடையே ஏகபோக வரவேற்பை பெற்றது. எனவே இந்தப் படம் தற்போது கலைஞர் டிவியில் திரையிடப்பட உள்ளதால் அதனைக் கண்டு களிக்க ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துள்ளனர்.

எப்பொழுதுமே சூப்பர் ஹிட் படங்களை சன் டிவி எப்பொழுதுமே சேட்டிலைட் உரிமையை போட்டி போட்டுக்கொண்டு வாங்கும் நிலையில் இந்த முறை கலைஞர் டிவி முந்திக் கொண்டுள்ளது.

Trending News