புதன்கிழமை, ஜனவரி 15, 2025

Aranmanai 4 : வார முதல் நாளே சரியத் தொடங்கிய அரண்மனை 4 வசூல்.. நான்கு நாட்களில் அள்ளிய கலெக்ஷன்

அரண்மனை 4 படம் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகியிருந்தது. சுந்தர் சி தொடர்ச்சியாக இந்த படத்தின் அடுத்தடுத்த பாகங்களை எடுத்து வருகிறார். கடந்த மூன்று பாகங்களுக்கு கிடைக்காத அளவுக்கு இந்த படத்திற்கு வரவேற்பு கிடைத்து வருகிறது.

இப்படத்தில் தமன்னா, ராசி கண்ணா போன்ற நடிகைகள் நடித்திருக்கின்றனர். அதுவும் ஒரு பாடலில் இவர்கள் கவர்ச்சி நடனம் ஆடியது ரசிகர்களை கவர்ந்து இழுத்தது. முதல் நாளே இந்த படம் கிட்டத்தட்ட 4.75 கோடி வசூல் செய்தது.

இதை தொடர்ந்து படத்திற்கு நல்ல விமர்சனம் கிடைத்த நிலையில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை அதிக வசூலை பெற்றது. அந்த வகையில் இரண்டாம் நாள் முடிவில் 7 கோடி மற்றும் மூன்றாம் நாள் முடிவில் 11 கோடி வசூல் செய்தது. மூன்று நாட்களில் தமிழ்நாட்டில் மட்டும் கிட்டத்தட்ட 23 கோடி வசூல் செய்தது.

சுந்தர் சி யின் அரண்மனை 4 படத்தின் வசூல்

உலக அளவில் இந்த படம் 34 கோடி வசூல் செய்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை வேற்லை நாட்கள் என்பதால் அரண்மனை 4 படத்தின் வசூல் குறைந்திருக்கிறது. வாரத்தின் முதல் நாளே வசூல் மந்தம் அடைந்துள்ளது.

அதன்படி நான்காவது நாள் முடிவில் 5 கோடி மட்டுமே அரண்மனை 4 வசூல் செய்திருக்கிறது. மொத்தமாக இதுவரை அரண்மனை படம் தமிழ்நாட்டில் 27 கோடி வசூல் செய்திருக்கிறது. ஆனாலும் இவ்வளவு சீக்கிரம் அரண்மனை படம் வசூலை குவித்தது பட குழுவுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

மேலும் கோடை விடுமுறையாக இருந்தும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வெளியில் வர அச்சப்படுகிறார்கள். இதனால் அரண்மனை 4 படத்தின் வசூல் எதிர்பார்த்ததை விட இன்னும் அதிக மடங்கு வசூல் செய்திருக்கும் என்று கூறப்படுகிறது.

Trending News