புதன்கிழமை, ஜனவரி 15, 2025

Sundar C: அரண்மனை 4ஆம் பாகத்தால் ஹிப் ஹாப் ஆதிக்கு அடித்த ஜாக்பாட்.. அலமாரியில் இருந்து தூசி தட்டிய ஐசரி கணேஷ்

சுந்தர் சி அரண்மனை 4 அனைத்து தியேட்டர்களிலும் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது. படம் ரிலீஸ் ஆகி 10 நாட்கள் ஆகியும் மவுசு குறையாமல் எல்லா சென்டர்களிலும் பட்டையை கிளப்பி வருகிறது. இதுவரை இந்த படம் 50 கோடிக்கு மேல் வசூல் சாதனையும் படைத்துள்ளது.

இந்த படத்தில் மியூசிக் டைரக்டராக பணியாற்றியவர் ஹிப் ஹாப் ஆதி. பின்னணி இசை மற்றும் ரீ ரெகார்டிங் இரண்டிலும் பின்னி எடுத்து இருக்கிறார் ஆதி. இந்த இரண்டும் படத்திற்கு பிளஸ் பாயிண்ட் ஆக அமைந்தது. இதனால் ஆதிக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வரும் என்பதில் சந்தேகம் இல்லை.

அலமாரியில் இருந்து தூசி தட்டிய ஐசரி கணேஷ்

இப்பொழுது லைம் லைட்டுக்கு வந்த அவரை வைத்து கல்லாகட்ட திட்டம் போட்டு வருகிறது ஐசரி கணேசின் வேல்ஸ் தயாரிப்பு நிறுவனம். அந்த நிறுவனம் இவரை வைத்து ஒரு படம் எடுத்து அதை ரிலீஸ் செய்ய முடியாமல் அலமாரியில் வைத்துள்ளது. இப்பொழுது ஆதி லைம் லைட்டில் இருப்பதால் அதை தூசி தட்டப் ஏற்பாடு செய்கின்றனர்.

ஆதி நடித்து வியாபாரமாகாமல் கிடக்கும் படம் “பி டி சார்” இந்தப் படத்தை இப்பொழுது ரிலீஸ் செய்யப் போகிறார்களாம். ஆதி முன்பு கொடுத்த பெய்லியர் படங்களால் “பி டி சார்” படம் வியாபாரம் விஷயத்தால் சற்று டல்லாகிறது. ஆனால் இந்த படத்தை பற்றி ஆகா ஓகோ என்று சொல்கிறார்கள்.

பி டி சார் படத்தில் வேலை செய்த அனைவரும் படம் மிகவும் நன்றாக இருக்கிறது. ஆதி கேரியரில் இந்த படம் திருப்புமுனையாக இருக்கும் என்று கூறி வருகிறார்கள். ஆனால் வியாபாரம் டல்லடிக்கவே அதை கண்டுக்காமல் விட்டு விட்டனர். இப்பொழுது அரண்மனை 4 படத்தால் வெளிவர காத்திருக்கிறது ஹிப் ஹாப் ஆதியின் “பி டி சார்” படம்

Trending News