விஜய் தொலைக்காட்சியில் நகைச்சுவைக்கென ஒளிபரப்பாகிய நிகழ்ச்சி கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் அறந்தாங்கி நிஷா. அதனை தொடர்ந்து டான்ஸ் ஜோடி டான்ஸ் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் இவரது பங்களிப்பைப் பார்த்திருப்போம்.
இதுபோல நகைச்சுவை செய்வதிலிருந்து நடனம், சமையல்கலை மற்றும் பேச்சு திறமை வரை இவரது திறமையை கண்டு பலரும் அறந்தாங்கி நிஷாவை பாராட்டி உள்ளனர். இவரின் குடும்பத்தார் இவருக்கு அளித்து வரும் ஒத்துழைப்பை பற்றியும் பெருமையாக கூறி வருகின்றனர். அறந்தாங்கி நிஷா திரை உலகில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடிப்பதற்காக மிகவும் கடினமாக உழைத்துள்ளார்.
பல்வேறு இன்னல்களை கடந்து வந்த அறந்தாங்கி நிஷா தற்போது மக்கள் மத்தியில் நன்கு பிரபலம் அடைந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். ரசிகர்களின் கேள்விகளுக்கு சலிக்காமல் பதில் அளித்து வருபவர்.
இவருடைய குழந்தையின் புகைப்படம் மற்றும் வீடியோ பதிவினை வலைதளங்களில் அவ்வப்போது வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். இவர் தன்னுடைய புது கெட்டப்பில் வித்தியாசமான ஒரு போஸுடன் சமீபத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்துடன் ‘இது என்ன கெட்டப் என்று கண்டுபிடிங்க பார்ப்போம் என்றும் நான் யாருன்னு தெரியுதா’ என்றும் கேள்வி கேட்டுள்ளார்.

இந்த கேள்விக்கு இவரின் ரசிகர் ஒருவர் அறந்தாங்கி நிஷா தானே என்றும் இது நாய் சேகர் கெட்டப் என்றும் பதில் அளித்துள்ளார். அறந்தாங்கி நிஷா புதிதாக நாய் சேகர் கெட்டப் அணிந்து பின்புறமாக திரும்பி நிற்பது போன்ற போஸை கொடுத்து எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தற்போது இந்த புகைப்படத்திற்கு எக்கச்சக்கமான லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது. அத்துடன் இந்தப் புகைப்படத்தில் அறந்தாங்கி நிஷா அச்சு அசல் நாய் சேகர் போன்றே தெரிகிறார்.