விஜய் டிவியில் காமெடி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் அறந்தாங்கி நிஷா. சமீபத்தில் விஜய் டிவியில் நடத்தப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஆனால் நிகழ்ச்சியில் கிடைத்த நல்ல பெயரை பிக் பாஸ் வீட்டுக்குள் கெடுத்துக் கொண்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.
அந்த அளவுக்கு அர்ச்சனாவுடன் சேர்ந்த இவரது பெயர் ஏகத்துக்கும் டேமேஜ் ஆனது. அதன் பிறகு பெரிதாக வெளியில் தலை காட்டாமல் சுற்றி வந்த அறந்தாங்கி நிஷா தற்போது உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறிவிட்டார்.
அந்த புகைப்படங்கள்தான் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அழகுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் திறமைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சேனல்களில் மிக முக்கியமானவை விஜய் டிவி.
அதில் தன்னுடைய காமெடி பேச்சுக்களால் அனைவரையும் கவர்ந்தவர் தான் அறந்தாங்கி நிஷா. விஜய் டிவியில் ஒளிபரப்பான பல்வேறு காமெடி நிகழ்ச்சிகளிலும், பண்டிகை நாட்களில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளிலும் தன்னுடைய காமெடியால் அனைவரையும் கவர்ந்தவர்.

தொலைக்காட்சியில் மட்டுமில்லாமல் சினிமாவிலும் அடுத்தடுத்த அவருக்கு பட வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. ஏற்கனவே சுந்தர் சி இயக்கிய கலகலப்பு 2 படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அடுத்த கோவை சரளாவாக மாறவேண்டும் என்பதுதான் அறந்தாங்கி நிஷாவின் நீண்ட நாள் ஆசையாம். அதற்காக தற்போது பட வேட்டையை தொடங்கியுள்ளார். இவருடைய காமெடி திறமைக்கு கண்டிப்பாக சினிமாவில் ஒரு அங்கீகாரம் கிடைக்கும் என பலரும் கூறிவருகின்றனர்.