திங்கட்கிழமை, மார்ச் 17, 2025

மீனாவிடம் எல்லா உண்மையும் சொல்லப்போகும் அரசி, வீட்டை விட்டு போகும் பாண்டியன்.. கதிர் ராஜியால் வந்த பிரச்சனை

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், பாண்டியன் வீட்டு பொருத்தவரை சரவணனை தவிர மற்ற இரண்டு மகன்களும் காதலித்து தான் கல்யாணம் பண்ணி இருக்கிறார்கள். அதிலும் கதிர், ராஜியை விரும்பி கல்யாணம் பண்ணி இருக்கிறார் என்று எல்லோரும் நினைக்கிறார்கள். இதை மனதில் வைத்து தான் அரசியும் அப்பாவுக்கு எதிரி குடும்பத்தில் இருந்து ராஜியை கல்யாணம் பண்ணி கதிர் அண்ணன் அண்ணியாக கூட்டிட்டு வந்து விட்டார்.

ஆரம்பத்தில் அப்பா கோபப்பட்டாலும் தற்போது எல்லோரும் ஒன்றாகி விட்டோம், அதே மாதிரி நாமும் குமரவேலுவை கல்யாணம் பண்ணி விட்டால் நம்முடைய காதலை அப்பா ஏற்றுக் கொண்டு விடுவார் என்ற குருட்டு நம்பிக்கையில் அரசி, குமரவேலுவை காதலிக்க தொடங்கிவிட்டார். ஆனால் அது காதலுடன் மட்டுமில்லாமல் ஊர் சுற்றுவது சினிமாவிற்கு போவது என்று பல விஷயங்களை தைரியமாக செய்ய துணிந்து விட்டார்.

காதலுக்கு கண் இல்லை என்று சொல்வதற்கு ஏற்ப அரசி காதலித்தது தவறில்லை, ஆனால் யாரை காதலிக்கிறோம் எப்படிப்பட்டவரை நம்புகிறோம் என்பது தான் முக்கியம். இந்த விஷயத்தில் அரசி கோட்டை விட்டுவிட்டார். அதாவது குமரவேலு பொறுத்தவரை அரசியை முழு மனதுடன் காதலிக்கவில்லை, பாண்டியன் குடும்பத்தை அவமானப்படுத்தவும் அங்கு இருப்பவர்களை சித்திரவதை செய்வதற்கு அரசி நம்முடன் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் குமரவேலு காதலிப்பது போல் நடித்து வருகிறார்.

இது தெரியாத அரசி, குமரவேலுவை முழுமையாக நம்பி விட்டார். அதற்கு இந்த சுகன்யா வந்து சகுனி வேலையை பார்த்து அரசி வாழ்க்கையை கும்மி அடித்து விட்டார். அரசி மற்றும் குமரவேலு ஒன்றாக படம் பார்த்துவிட்டு வந்து பேசிக் கொண்டிருப்பதை பார்த்த சரவணன் ஒட்டுமொத்த கோபத்துடன் வீட்டில் இருப்பவர்கள் அனைவரிடம் உண்மையை போட்டு உடைத்து விடுகிறார்.

இதைக் கேட்டு அதிர்ச்சியான பாண்டியன் மற்றும் கோமதி எதுவும் பேச முடியாமல் வாய் அடைத்து போய் கலங்கி போய் நிற்கிறார்கள். செய்றதெல்லாம் செய்துவிட்டு தற்போது அரசி அப்பாவிடம் மன்னிப்பு கேட்கிறார். ஆனால் தான் வளர்ப்பு தவறாக போய்விட்டதே என்று பீல் பண்ணிய பாண்டியன் அதிர்ச்சியாகி நெஞ்சை பிடித்து விட்டார். கோமதியும் என்ன சொல்வது என்று தெரியாமல் மௌனமாகிவிட்டார்.

கடைசியில் பாண்டியன் மகள் செய்த துரோகத்தை தாங்க முடியாமல் தனியாக வெளியே போய் பீல் பண்ணுகிறார். அந்த வகையில் கொட்டும் மழையில் சொட்ட சொட்ட நனைந்து யாரும் இல்லாத ஒரு தனி மரமாக நின்று பாண்டியன் வருத்தப்பட போகிறார். இதோடு மட்டும் இல்லாமல் சுகன்யா இந்த பிரச்சனையை பெருசாகி பாண்டியன் குடும்பத்தை அல்லல் படுத்த வேண்டும் என்பதற்காக அடுத்து பண்ண போகும் வேலை என்னவென்றால் குமரவேலு மற்றும் அரசிக்கு திருட்டு கல்யாணம் பண்ணி வைப்பது தான்.

இதற்கிடையில் அரசியும் சுகன்யாவும் அடிக்கடி பேசிய விஷயங்களையும், பண்ற திருட்டு வேலைகளையும் மீனா கண்டுபிடிக்க போகிறார். அந்த வகையில் அரசியை தனியாக கூப்பிட்டு உனக்கு இவ்வளவு தைரியம் கிடையாது எங்கிருந்து வந்துச்சு என்ன என்று கேள்வி கேட்கப் போகிறார். அப்பொழுது அரசி சுகன்யாவை பற்றி சொல்லி அவங்க தான் சினிமாவிற்கு கூட்டிட்டு போனாங்க. அங்க போய் திடீரென்று வரவில்லை என்று சொல்லி குமரவேலுடன் என்னை அனுப்பி வைத்தார் என்ற உண்மையை மீனாவிடம் போட்டு உடைக்க போகிறார்.

Trending News