வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

படப்பிடிப்புக்கு வராமல் கறார் காட்டும் அரவிந்த்சாமி.. தலையில் துண்டை போடும் தயாரிப்பாளர்கள்

தமிழ் சினிமாவில் தளபதி படத்தின் மூலம் அறிமுகமானவர் அரவிந்த் சாமி. இவர் அறிமுகமான முதல் படமே அவருக்கு பெரிய அளவில் வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. அதனால் தொடர்ந்து பல படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. அதனை சரியாக பயன்படுத்திக் கொண்டு பல படங்கள் நடித்தார்.

ரோஜா, பாம்பே மற்றும் அலைபாயுதே போன்ற படங்கள் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தன. தொடர்ந்து பல படங்கள் நடித்துவந்த அரவிந்த்சாமி ஒரு கட்டத்திற்குப் பிறகு பெரிய அளவில் படங்கள் நடிக்கவில்லை. அதற்கு காரணம் இவர் நடிப்பில் வெளியான ஒரு சில படங்கள் நினைத்த படி வெற்றி பெறவில்லை அதனால் படங்கள் நடிப்பதில் இருந்து சிறிது காலங்கள் விலகி இருந்தார்.

அரவிந்த்சாமி பொருத்தவரை எப்போதுமே அட்வான்ஸ் வாங்காமல் தான் படத்தில் நடிப்பார். மேலும் படப்பிடிப்பு பாதி முடிந்த பிறகுதான் அட்வான்ஸ் வாங்குவார். பின்பு படம் வெளியான பிறகு தனக்கு சேரவேண்டிய முழு தொகையும் சம்பளமாகப் பெற்றுக் கொள்வார் இதனை அவரே ஒரு மேடையில் கூறியுள்ளார்.

ஆனால் தற்போது அரவிந்த்சாமி சரியாக படப்பிடிப்பிற்கு வருவதில்லை என தயாரிப்பாளர்கள் கூறிவருகின்றனர். ஒரு சிலர் அரவிந்த்சாமி படப்பிடிப்புத் தளத்திற்கு வராமல் போனதற்கு காரணம் தயாரிப்பாளர்கள்தான் என கூறுகின்றனர். அதாவது படப்பிடிப்பு பாதி முடிந்த பிறகு பாதி சம்பளத்தை கொடுக்கின்றனர்.  ஆனால் படம் வெளிவந்த பிறகு மீதி சம்பளத்தை கொடுக்காமலேயே ஏமாற்றி விடுகின்றனர்.

arvind swamy
arvind swamy

இதனால் அரவிந்த்சாமி படப்பிடிப்பு பாதி முடிந்த பிறகு மீதியுள்ள தொகை கொடுத்தால் மட்டும்தான் படத்தில் நடிப்பேன் என கூறி வருகிறார். அதற்கு காரணம் படம் நடித்து முடித்துவிட்டால் தயாரிப்பாளர்கள் சொன்னபடி சம்பளத்தை கொடுக்க மாட்டார்கள். ஆனால் படம் பாதியில் சம்பளம் கொடுத்தால்தான் நடிப்பேன் என கூறினாள் வேறு வழியின்றி முழு சம்பளத்தையும் கொடுத்து விடுவார்கள்.

இதனால்தான் அரவிந்த்சாமி சம்பளம் கொடுத்தால் தான் படத்தில் நடிப்பேன் இல்லையென்றால் படப்பிடிப்பு தளத்திற்கு வர மாட்டேன் என கூறியுள்ளார்.இதனால் ஒரு சில தயாரிப்பாளர்கள் அரவிந்த்சாமி தற்போது சொன்னபடி நடந்து கொள்வதில்லை என குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும் ஒரு சிலர் அரவிந்த்சாமி செய்வது சரியானதுதான் ஆனால் அதனை சரியான முறையில் பேசி தீர்க்க வேண்டும் என கூறி வருகின்றனர்.

Trending News