வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

பிக்பாஸ் வரலாற்றையே மாற்றிய அர்ச்சனா.. அள்ள அள்ள குறையாத ஓட்டு, மரண பீதியில் மாயா அண்ட் கோ

Biggboss 7: கடந்த சில நாட்களாகவே திரும்பும் பக்கம் எல்லாம் பிக்பாஸ் பற்றிய பேச்சு தான் பரபரப்பை கிளப்பிக் கொண்டிருக்கிறது. அதிலும் இந்த வாரம் யார் வீட்டை விட்டு வெளியேறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் பிக்பாஸ் வீட்டில் நடக்கும் அராஜகம் தான்.

எப்போதுமே மாயா அண்ட் கோ பிரச்சனையின் முழு உருவமாக இருக்கும் நிலையில் இந்த வாரம் அந்த ஆட்டம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது. அணைய போற விளக்கு தான் பிரகாசமாக இருக்கும் என்பது போல் இருக்கிறது இவர்களின் லூட்டி. அதற்கேற்றார் போல் பிக்பாஸும் மாயாவை கேப்டன் ஆக்கி சலங்கையை கட்டிவிட்டு இருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் கடந்த வாரம் நடந்த ரெட் கார்ட் விஷயமும் இந்த கூட்டணிக்கு சாதகமாக அமைந்துவிட்டது. அதனாலயே இந்த வாரம் முழுக்க இவர்களுடைய அட்டகாசம் லிமிட்டை தாண்டி சென்றது. அதே நேரத்தில் சமூக வலைத்தளங்களில் பிக்பாஸ் நிகழ்ச்சி பலராலும் கழுவி ஊற்றப்பட்டு வந்தது.

Also read: நான் வீழ்வேனென்று நினைத்தாயோ.. பழி வெறியோடு ரீ என்ட்ரிக்கு தயாராகும் பிக்பாஸ் பிரதீப்

இப்படி பெரும் அக்கப்போர் நடந்த நிலையில் தான் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் நம்ம அழுகாட்சி அச்சு ஆவேசமாக பொங்கி எழுந்தார். அதைத்தொடர்ந்து தற்போது வரை அவர் மாயா கும்பலை வெளுத்து வாங்கி வருகிறார். அவருக்கு துணையாக விசித்ரா, தினேஷ் ஆகியோரும் களத்தில் குதித்துள்ளனர்.

இதனால் படு சுவாரஸ்யமாக மாறிய நிகழ்ச்சியில் தற்போது பலரும் எதிர்பார்த்த விஷயம் நடந்திருக்கிறது. அதாவது இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு பூர்ணிமா தான் வெளியேறுகிறார். அதேபோன்று அதிகபட்சமாக 5 லட்சத்திற்கும் மேல் வாக்குகளை பெற்று கெத்து காட்டி இருக்கிறார் டார்லிங் அர்ச்சனா.

இதுவரை நடந்த பிக்பாஸ் சீசன்களில் இந்த அளவுக்கு ஓட்டு யாருக்கும் கிடைத்தது கிடையாது. அதுவும் வீட்டுக்குள் நுழைந்த இரண்டு வாரத்திலேயே இவருடைய கிரேடு உயர்ந்துள்ளது. அதற்கு முக்கிய காரணம் இவர் கொடுக்கும் ஒவ்வொரு பதிலையும் நங்கூரம் போல் எதிரணியை தாக்குகிறது. இதன் மூலம் அர்ச்சனா பிக்பாஸ் வரலாற்றையே மாற்றியுள்ளார். ஆக மொத்தம் நாளை மாயா அண்ட் கோ மரண பீதியில் குறைந்து போவது மட்டும் உண்மை.

Also read: பிரதீப்பிடம் மண்டியிட்ட பிக்பாஸ்.. முதுகில் குத்திய 2 பேரை காலி செய்ய வரும் தாடி பாய்

Trending News