வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

மறுபிறவி எடுத்து மீண்டு வந்த அர்ச்சனா.. எப்போது டிவி நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் தெரியுமா.?

தமிழில் சினனத்திரை சீரியல்களில் பலர் பிரபலம் என்றால் ரியாலிட்டி ஷோக்களின் வாயிலாக பிரபலமானவர்களும் சிலர் உண்டு. மாகபா ஆனந்த் ரக்சன் ஜாக்லின் பாவனா வி.ஜே.ரம்யா என லிஸ்டின் நீளம் கொஞ்சம் அதிகம் தான்.

அப்படியான ரியாலிட்டி ஷோக்களில் பிரபலமான தொகுப்பாளினியாக துவங்கியவர் தான் அர்ச்சனா. சமீபத்தில் வெளியான பிக்பாஸ் சீசனில் மீண்டும் மக்கள் மத்தியில் தன் பிரபலத்தை உறுதிப்படுத்திக்கொண்டார் அர்ச்சனா. ரசிகர்களை அதிகமாக கொண்ட சன் டிவி பிரபலங்களில் ஒருவராக திகழும் அர்ச்சனா சமூக வலைகளை பொறுத்த வரை எப்போதும் கிரீன் லைட்டில் தான் இருக்கிறார்.

ரசிகர்கள் பலருக்கும் தன் முகத்தை எப்போதும் நினைவில் வைக்கும் வகையில் பல்வேறு புகைப்படங்களை அப்லோட் செய்து வருகிறார். என்னதான் மகளுடன் உறவினர்களுடன் என அர்ச்னா போட்டோ பகிர்ந்தாலும் அப்போதும் அதிகம் கவனிக்கப்படுவது அர்ச்சனா தான்.

நேரலை வீடியோக்களில் ரசிகர்களுடன் பல்வேறு பிரபலங்கள் தோன்றி அரட்டை அடித்து வருபவர்கள் பலர் இப்படியான செயலுக்கு அர்ச்சனாவும் விதிவிலக்கல்ல. சமீபத்தில் நேரலை பதிவிட்ட அர்ச்சனாவிடம் ரசிகர்கள் தரப்பிலிருந்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன.

ஏன் உங்கள் குரல் மாறிவிட்டது என்ற கேள்வியும் கேட்கப்பட்டது அதற்கு பதிலளித்திருந்த அர்ச்சனா தனது காலின் தொடை பகுதியில் இருந்து தசையை வெட்டி எடுத்து மூக்கில் ப்ளாஸ்ட் செய்திருப்பதாகவும் கூறினார்.

எப்போது மீண்டும் திரையி்ல் வருவீர்கள் என்ற கேள்விக்கு தனது தொடைப்பகுதியில் சதை எடுக்கப்பட்டுள்ளதால் என்னால் இப்போது நிற்க முடியாது என்றும். சூட்டிங் ஸ்பாட்டில் குறைந்த பட்சம் 12 மணி நேரம் முதல் 14 வரை நிற்க வேண்டும் என்றும் கூறினார்.

biggboss-archana-cinemapettai
biggboss-archana-cinemapettai

மேலும் இப்போது இருக்கின்ற நிலைக்கு அதற்கு வாய்ப்பில்லை என்றும் தான் குணமாக இன்னும் மூன்று மாதங்கள் ஆகும் என்றும் கூறினார். கொஞ்சம் சரியானதும் நடைப்பயிற்சி எல்லாம் மேற்கொண்டு முயற்சிக்க வேண்டும் என்றும் கூறினார்.

Trending News