வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

பெண்ணியமா பேசுற, இப்ப பாரு ஆன்ட்டி.. தொக்காக சிக்கிய மாயாவுக்கு ஆப்படிக்க போகும் அர்ச்சனா

Biggboss 7: இவங்க அட்டூழியத்துக்கெல்லாம் ஒரு முடிவே கிடையாதா என்று கதறி வந்த பிக்பாஸ் ரசிகர்கள் தற்போது பயங்கர கொண்டாட்டத்தில் இருக்கின்றனர். அந்த அளவுக்கு மாயாவும் அவருடைய கோஷ்டியும் அரண்டு போய் இருக்கின்றனர். தெரியாமல் கையை வச்சிட்டோமோ என நினைக்கும் அளவுக்கு வச்சு செய்து கொண்டிருக்கிறார் அர்ச்சனா.

இதற்கு முக்கிய காரணம் நிக்சன் அர்ச்சனாவை தரக்குறைவாக பேசியதோடு கொலை மிரட்டல் விடுத்தது தான். இந்த விவகாரம் தான் இப்போது சோசியல் மீடியாவில் வைரலாகி கொண்டிருக்கிறது. அதை தொடர்ந்து ரெட் கார்டு கொடுக்க வேண்டும் என்ற கமெண்ட்டுகளும் பறந்து கொண்டிருக்கிறது.

இதை எதிர்பார்த்து கழுகு போல் காத்திருந்த அர்ச்சனாவும் தொக்காக சிக்கிய மாயாவையும் அவருடைய அல்லக்கைகளையும் ஒரு வழி செய்ய ஆயத்தமாகி கொண்டிருக்கிறார். அதன் படி வினுஷாவை நிக்சன் மோசமாக பேசியதற்கு மன்னிப்பு கேட்டார். ஆனால் அந்த விவகாரம் இப்போது அர்ச்சனாவால் தோண்டப்பட்டு விஸ்வரூபம் எடுத்துள்ளது.

Also read: மைண்ட் வாய்ஸ்ன்னு நினைச்சு உண்மையான சுயரூபத்தை காட்டிய நிக்சன்.. பெண்கள் பாதுகாப்பு இதுவா ஆண்டவரே.?

இதில் அர்ச்சனா மேல் தவறு இருக்கிறதா இல்லையா என்ற விவாதம் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கிறது. ஆனாலும் இதன் மூலம் வினுஷாவுக்கு நியாயம் கிடைக்கும் என்பதே பலரின் கருத்தாக இருக்கிறது. அந்த வகையில் பிரதீப் விஷயத்தில் பெண்ணியம் பேசிய மாயா கோஷ்டி அர்ச்சனாவுக்கு ஆதரவாக ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

அந்தப் பாயிண்டை சரியாக பிடித்த அர்ச்சனா இதை வைத்தே உரிமை குரல் தூக்கப் போவதாக தற்போது பிக்பாஸ் வீட்டில் கூறிக் கொண்டிருக்கிறார். அந்த ப்ரோமோ தான் இப்போது ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டி இருக்கிறது. அவங்க ஒருத்தரையும் விடமாட்டேன். சாரி சொன்னா கூட என் மூஞ்சிலயே முழிக்க கூடாது என ஆவேசமாக கூறுகிறார்.

ஒரு பக்கம் அர்ச்சனா இந்த விஷயத்தை தனக்கு சாதகமாக்கி கொள்வது தெரிகிறது. ஆனாலும் மாயா கோஷ்டிக்கு இந்த அடி தேவைதான். இதன் பிறகாவது அவர்கள் நேர்மையாக விளையாட்டை தொடர்ந்தால் நன்றாக இருக்கும்.

Also read: உங்களுக்கு வந்தா ரத்தம் எனக்கு வந்தா தக்காளி சட்னியா.? மாயா மாஃபியாவை வச்சு செய்யும் கர்மா

Trending News