வியாழக்கிழமை, ஜனவரி 9, 2025

கோட் பட பாடல்கள் சொதப்ப அனிருத் தான் காரணம்.. தேரை இழுத்து தெருவில் விட்ட அர்ச்சனா கல்பாத்தி

GOAT: தளபதி விஜய் நடித்த கோட் படம் இன்னும் ரெண்டு நாட்களில் ரிலீஸ் ஆக இருக்கிறது. விஜயின் முந்தைய படங்களில் எல்லாம் அவர் படம் சம்பந்தப்பட்ட யாராவது பேட்டி கொடுப்பார்களா என ஏங்கிக் கொண்டிருப்போம்.

ஏதாவது ஒரு அப்டேட் கொடுத்து விட மாட்டார்களா என முழு பேட்டியையும் பார்த்த காலமெல்லாம் உண்டு. ஆனால் கோட் படத்தை பொருத்தவரைக்கும் தயவு செஞ்சு படகுழுவை இன்டர்வியூ எடுக்காதீங்க என கதறும் அளவுக்கு இருக்கிறது.

ஆளாளுக்கு ஒரு சேனலில் உட்கார்ந்து படத்தைப் பற்றி எல்லா கதையையும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். பத்தாத குறைக்கு படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி கொடுத்து இருக்கும் பேட்டி கொஞ்சம் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

விஜய்க்கு தொடர்ந்து அனிருத் தான் ஒரு சில வருடங்களாக இசையமைத்து வருகிறார். யுவன் சங்கர் ராஜா கிட்டத்தட்ட 23 வருடங்களுக்குப் பிறகு விஜய் படத்தில் இணைந்திருக்கிறார். இதில் யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கும் போதே கண்டிப்பாக வெங்கட் பிரபுவின் சாய்ஸ் தான் என நன்றாக தெரிந்து விட்டது.

தேரை இழுத்து தெருவில் விட்ட அர்ச்சனா கல்பாத்தி

படத்தின் பாடல்கள் கலவையான விமர்சனங்களை தான் பெற்றிருக்கிறது. இது குறித்து அர்ச்சனா கல்பாட்டை தன்னுடைய சமீபத்திய இன்டர்வியூ ஒன்றில் சொல்லி இருக்கிறார். கோட் படத்தின் பின்னணி இசைக்காக யுவன் சங்கர் ராஜா ரொம்ப மெனக்கெட்டு இருக்கிறார்.

படத்தின் ஒரு சில பாடல்கள் எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்களை இம்ப்ரஸ் செய்யவில்லை. இதற்கு காரணம் நாம் தொடர்ந்து அனிருத்தின் பாடல்களுக்கு பழகிவிட்டது தான். துப்பாக்கி படம் போல கோட் படத்தின் பாடல்கள் கேட்க கேட்க எல்லோருக்கும் பிடிப்பதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது என சொல்லி இருக்கிறார்.

இதிலிருந்து அனிருத்தை தாண்டி இந்த படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைக்க வேண்டும் என்பது வெங்கட் பிரபுவின் ஒரே சாய்சாக இருந்திருக்கிறது என்பது உறுதியாகி இருக்கிறது.

மாஸ் காட்டும் விஜய்யின் கோட்

Trending News