வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

தளபதி 68 டைட்டில் Boss இல்ல Puzzle-லும் இல்ல.. மொத்த சீக்ரெட்டையும் போட்டு உடைத்த அர்ச்சனா கல்பாத்தி

Thalapathy 68 Title: பொதுவாக முன்னணி நடிகர்களின் படங்கள் என்றாலே, படத்தின் அப்டேட்டை பட குழு கொடுப்பதற்கு முன்பு வதந்திகள் காட்டுத்தீயாய் பரவ தொடங்கிவிடும். அதிலும் நடிகர் விஜய் படத்திற்கு கேட்கவே வேண்டாம். லியோ படம் விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் ஆரம்பிக்கும் பொழுதே LCU பற்றி நிறைய வியூகங்கள் வெளியேற ஆரம்பித்தன. அப்படித்தான் இப்போது தளபதி 68 க்கும் நடந்திருக்கிறது.

தளபதி 68 பொறுத்த வரைக்கும் வெங்கட் பிரபு தரப்பிலிருந்து எந்த அப்டேட்டும் அவ்வளவு சீக்கிரமாக வெளியாகவில்லை. ஆனால் படத்தின் நட்சத்திர தேர்வு பற்றி செய்திகள் நிறைய வெளியாகின. அதில் 90 சதவீதம் எல்லாமே இப்போது உண்மையாக இருக்கிறது. பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், லைலா, சினேகா, மோகன் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளம் இந்த படத்தில் இணைந்து இருக்கிறது.

Also Read:தளபதியை குஷி படுத்த 5 ஹீரோயின்களை களம் இறக்கும் வெங்கட் பிரபு.. மார்க்கெட் குறையாத லைலா

இந்த நிலையில் நேற்று தளபதி 68 படத்தின் டைட்டில் லீக் ஆகிவிட்டதாக செய்திகள் உலா வர ஆரம்பித்தன. பாஸ் என்ற டைட்டில் தான் தளபதி 68க்கு வைக்கப்பட்டிருப்பதாக சொல்லப்பட்டது. ஒரு பக்கம் விஜய் ரசிகர்கள் இந்த டைட்டிலை கொண்டாட ஆரம்பித்தார்கள். மறுபக்கம் பாஸ் என்றால் லாஸ் தான் என விஜய்க்கு பிடிக்காதவர்கள் கிளப்பி விட ஆரம்பித்தார்கள்.

ட்வீட் போட்ட அர்ச்சனா கல்பாத்தி

வடிவேலுவின் பிரபல காமெடியில் என்னம்மா அங்க சத்தம், சும்மா பேசிட்டு இருக்கோம் மாமா என்ற டயலாக் ரொம்பவும் ரீச் ஆனது. அந்த தோணியில்தான் தற்போது தளபதி 68 படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி படத்தின் டைட்டில் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முடிவில், இன்று காலையே ட்வீட் போட்டு பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறார்.

அவர் போட்டிருக்கும் பதிவில் தளபதி 68 படத்தின் எல்லா அப்டேட்டுகளையும் பார்த்தேன். உங்கள் அன்புக்கு நன்றி. உண்மையான டைட்டில் சீக்கிரம் வெளியிடப்படும் பொருத்திருங்கள், வெங்கட் பிரபு சிறப்பான டைட்டிலை தேர்வு செய்து வைத்திருக்கிறார், கண்டிப்பாக அந்த டைட்டில் பாஸும் இல்லை, பசுலும் இல்லை என்று சொல்லி இருக்கிறார்.

தளபதி 68 படம் சயின்ஸ் பிக்சன் மற்றும் குடும்பப் பின்னணியை மையமாகக் கொண்டு எடுக்கப்படும் கதை ஆகும். விஜய் இதுவரைக்கும் நடிக்காத கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் புத்தாண்டு கொண்டாட்டமாக டிசம்பர் 31ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அதை தொடர்ந்து பொங்கலுக்கும் புதிய அப்டேட் இருப்பதாக தகவல்கள் வெளியாக இருக்கிறது.

Also Read:தளபதி ஃபிட்னஸிற்கு இதுதான் காரணம்.. விஜய் என்றும் இளமையாக இருக்க கடைப்பிடிக்கும் 5 விஷயங்கள்

Trending News