வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

பூர்ணிமாவை வைத்து புது வியூகம் போடும் அர்ச்சனா.. இரண்டாக உடையும் Bully Gang

Biggboss 7: விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி தான் இப்போது சோஷியல் மீடியா சேனல்களுக்கு செம கன்டென்ட் ஆக இருக்கிறது. அதிலும் இந்த சீசன் போட்டியாளர்கள் யாரும் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை என்பதை தொடர்ந்து நிரூபித்து வருகின்றனர்.

இதில் நேற்று நல்லவர்களாக தெரிந்தவர்கள் இன்று கெட்டவர்களாக மாறுகின்றனர். அதேபோல் இன்று கெட்டவர்களாக இருப்பவர்கள் நாளை நல்லவர்களாக மாறிவிடுகின்றனர். இதனாலேயே இந்த சீசன் டைட்டில் வின்னர் யார் என்பதை கணிக்க முடியாமல் பார்வையாளர்கள் திணறிக் கொண்டிருக்கின்றனர்.

அப்படித்தான் ஆரம்பத்தில் அழுகாச்சி அச்சுவாக இருந்த அர்ச்சனா ஒரே வாரத்தில் ஆவேச அச்சுவாக மாறினார். அதில் ஆரம்பித்த அவருடைய ஆட்டம் இப்போது மொத்த வீட்டையும் ஆட்டி படைக்கிறது. இன்னும் சொல்லப்போனால் மாயா மாஃபியா கூட்டமே பதுங்கும் அளவுக்கு அர்ச்சனா இறங்கி ஆடிக் கொண்டிருக்கிறார்.

Also read: இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லையே இருந்திருக்கலாம்.. அனன்யா விஷயத்தில் பிக் பாஸ் செய்தது சரியா?

வாராவாரம் ஒவ்வொரு யுக்தியை பயன்படுத்தும் இவர் இந்த வாரம் முதல் ஆஸ்திரத்தை ஆழமாக போட்டிருக்கிறார். அதாவது இந்த சீசனில் மாயா, பூர்ணிமா இருவரும் ஒட்டி பிறந்த இரட்டையர்கள் போல் சுற்றிக் கொண்டிருக்கின்றனர். அவர்களை பிரிக்கத்தான் இப்போது அர்ச்சனா கேம் ஆடிக் கொண்டிருக்கிறார்.

அதன்படி இந்த வாரம் நடந்த டான்ஸ் மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்ற அர்ச்சனா தன்னுடைய பாயிண்டுகளை பூர்ணிமாவுக்கு கொடுத்தார். இதை எதிர்பார்க்காத மாயா இது போங்கு ஆட்டம் என வெளிப்படையாகவே கதறினார். ஆனால் உண்மையில் பூர்ணிமா தன்னை விட்டு விலகும் வயிற்றெரிச்சலில் தான் அவர் அப்படி பேசினார்.

இதைத்தான் அர்ச்சனாவும் எதிர்பார்த்தார். அந்த வகையில் தற்போது பூர்ணிமாவுடன் நெருங்கி இருக்கும் அர்ச்சனா அவருடைய நல்ல குணங்களை பற்றி புகழ்ந்து கொண்டிருக்கிறார். இதை வைத்து அடுத்த வாரம் புது ஆட்டத்தை தொடங்கும் அவர் மாயா கேங்கை இரண்டாக உடைத்து நிகழ்ச்சியின் போக்கை சுவாரஸ்யப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also read: மன உளைச்சலை ஏற்படுத்தும் பிக்பாஸ் 7.. கமலுக்கு எதிராக பாயும் தகவல் அறியும் உரிமை சட்டம்

Trending News