வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

விசித்ராவை நிக்க வச்சி கேள்வி கேட்ட அர்ச்சனா.. பேச முடியாமல் தவிக்கும் டம்மி மம்மி

BB7 Tamil: பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் வைல்டு கார்டு போட்டியாளராக உள்ளே வந்த விஜே அர்ச்சனா இந்த அளவுக்கு அந்த நிகழ்ச்சியை தலைகீழாக மாற்றி போடுவார் என்று யாருமே எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். அர்ச்சனாவுக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் கூட்டம் அதிகரித்துக் கொண்டே இருந்தாலும் ஒரு பக்கம் அவரிடம் குற்றமும் கண்டுபிடித்து தான் வருகிறார்கள்.

அர்ச்சனா வீட்டிற்குள் வந்த பொழுது அவருக்கு எதிராக மாயா கூட்டணியால் அனுப்பப்பட்டார் விசித்ரா. இவர்கள் இரண்டு பேரும் ஸ்மால் பாஸ் வீட்டில் இருந்த பொழுது விசித்ரா அர்ச்சனா மூலம் வெளியில் நடக்கும் விஷயங்களை எல்லாம் கேட்டுக் கொண்டார். அர்ச்சனா உடன் இருந்தால்தான் பெயர் வாங்க முடியும் என்பதை தெரிந்து கொண்டு இரண்டு வாரங்களாக இருவரும் சேர்ந்து பயணித்தார்கள்.

Also Read:கேவலமான கெட்ட வார்த்தை பேசி வசமாக சிக்கிய பூர்ணிமா.. ரவுண்டு கட்டி அடித்த மணி, விஷ்ணு

அதன் பின்னர் சுமூகமாக சென்று கொண்டிருந்த இவர்களுடைய உறவில் விரிசலும் விழுந்தது. விசித்ரா யாரும் எதிர்பார்க்காத வகையில் மீண்டும் மாயா கூட்டணியுடன் கைகோர்த்து இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் விஜே அர்ச்சனாவுக்கு எதிராகவும் பேசி வருவது பிக் பாஸ் பார்வையாளர்களுக்கு பெரிய அதிர்ச்சியாக அமைந்திருக்கிறது.

 மோதிக்கொண்ட விசித்ரா, அர்ச்சனா

இன்று பிக் பாஸ் வீட்டில் ஸ்டார் டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதில் விசித்திரா அர்ச்சனாவுக்கு ஸ்டார் கிடைக்கக் கூடாது என்று ஒரு சில கருத்துக்களை எடுத்து வைத்தார். அர்ச்சனாவின் உடல் நிலையை டிராமா ஆடுகிறார் என்று விசித்ரா சொன்னது அர்ச்சனாவுக்கு ரொம்ப டென்ஷன் ஆகிவிட்டது. அர்ச்சனா விசித்ராவை எதிர்த்து பேச ஆரம்பித்து விட்டார்.

நான் இந்த வீட்டிற்கு வந்த பொழுது நீங்கள் ரொம்பவும் நேர்மையாக விளையாடுகிறீர்கள், யார் பேச்சையும் கேட்காதீர்கள் என்று சொல்லி இருந்தேன். ஒரு வாரம் உங்களை விசித்திரா என்று மரியாதை இல்லாமல் சொல்கிறார்கள். ஒரு வாரம் விசித்ரா மேம் என்று சொல்கிறார்கள். அவர்களுடன் நீங்கள் இப்போது சேர்ந்திருக்கிறீர்கள் என்று சரமாரியாக கேள்வி கேட்க ஆரம்பித்தார்.

என்னுடைய உடல் நிலையை ட்ராமா என்று சொன்னதால் உங்கள் மீது நான் வைத்திருந்த மரியாதை மொத்தமாக போய்விட்டது. எனக்கு ஸ்டார் கிடைக்கக் கூடாது என்று பேசிய உங்களுக்கு ஸ்டார் கிடைக்கக் கூடாது என்று நான் நின்று விளையாடப் போகிறேன். ஒரு ஐந்து ஸ்டாருக்காக இப்படி நீங்கள் தரை குறைவாக பேசியது தப்பு என, விசித்ரா பதில் சொல்லாத அளவுக்கு அடித்து பேசியிருக்கிறார் அர்ச்சனா.

Also Read:ஆண்டவரை கோர்த்து விடும் ப்ளூ சட்டை.. அந்தர் பல்ட்டி அடிக்கும் கமல்

Trending News