திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

மாயாவின் முகத்திரையை கிழித்தெறிந்த அழுமூஞ்சி அர்ச்சனா.. சூனியக்காரியின் தவறை தட்டிக் கேட்காத கமல்

Bigg Boss season 7: பிக் பாஸ் தமிழில் வெற்றிகரமாக ஓடுவதற்கு முக்கியமான காரணம் கமலின் உரையாடலும், நீதி தவறாமல் கொடுக்கும் தீர்ப்பும் தான். ஆனால் அது தற்போது பிரதீப் விஷயத்தில் நியாயமாக இருந்திருக்கிறதா என்பது பலரிடமும் கேள்விகளை எழுப்பி வருகிறது. அதாவது இன்றைய ப்ரோமோ படி பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கும் போட்டியாளர்களை ஸ்மால் ஹவுஸில் இருக்கும் போட்டியாளர்கள் எலிமினேட் செய்திருக்கிறார்கள்.

அதற்கு அவர்கள் கூறப்பட்ட காரணங்கள் ஒரு குரூப் அமைத்து அவர்கள் பிளான் படி பிரதீப்புக்கு செங்கோடியை உயர்த்தி ரெட் கார்டு கொடுத்து எலிமினேட் பண்ணி இருக்கிறார்கள். இதை பிக் பாஸ் அறிவுறுத்திய பின் மாயா மற்றும் பூர்ணிமா மூஞ்சியில் அப்படியே ஈ ஆடவில்லை. குத்தமுள்ள மனசு தான் குறுகுறுக்கும் என்று சொல்வார்கள்.

அதுபோலத்தான் மாயா மற்றும் பூர்ணிமா செய்த காரியம் அப்பட்டமாக வெளியானதால் அர்ச்சனாவிடம் சண்டைக்கு போகிறார்கள். இதில் அர்ச்சனா கொஞ்சம் கூட இறங்காமல் மாயா செய்த தவறை சுட்டிக்காட்டும் விதமாக அவருடைய முகத்திரையை கிழித்து தொங்க விடுகிறார். அதாவது இந்த ஒரு விஷயத்தை வைத்து ஒருவருடைய கேரியரை காலி பண்ணுவது மட்டுமல்லாமல் அவருடைய லைப்பையும் வீணாக்கி விட்டீர்கள் என்று அர்ச்சனா பாயிண்ட் பாயிண்டாக பேசுகிறார்.

Also read: சினேகனுக்கு இருக்கிற அறிவில 10% கூட ஆண்டவருக்கு இல்லையா.? பிரதீப்பிற்காக கொந்தளித்த பிரபலம்

இதற்கு சரியான பதில் கொடுக்க முடியாமல் அப்படியே ஜம்பித்து போய் நிற்கிறார்கள் மாயா மற்றும் பூர்ணிமா. அத்துடன் விசித்ராவும், மாயா மற்றும் பூர்ணிமா செய்தது மிகப்பெரிய தவறு என்று அவருடைய கருத்தை முன்வைத்து வருகிறார். மேலும் இந்த பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்களை நம்புவதை விட பிரதிப்பை நம்பி ஒரு விஷயத்தை பேசலாம். ஆனால் மற்றவர்களை நம்பவே முடியாது என்று விசித்ரா கூறுகிறார்.

ஆக மொத்தத்தில் இப்பொழுதுதான் பிக் பாஸ் சீசனை சூடு பிடித்திருக்கிறது என்பதற்கு ஏற்ப மாயா பண்ண அட்டூழியங்களை எதிர்த்து கேட்கும் விதமாக அர்ச்சனா மற்றும் விசித்ரா அவர்களுடைய வாதங்களை கொடுத்து வருகிறார்கள். இதற்கிடையில் மாயா எவ்வளவோ விஷயங்களில் தவறு செய்திருக்கிறார். அத்துடன் பல தில்லாலங்கடி வேலையும் பார்த்து வருகிறார் என்று அப்பட்டமாக பார்ப்பவர்களுக்கு தெரிகிறது.

இருந்தாலும் இதையெல்லாம் தட்டிக் கேட்காத கமல், பிரதிபிடம் மட்டும் ஒரு தலைப்பட்சமாக தீர்ப்பை சொன்னது எந்த விதத்தில் சரியாகும். அத்துடன் மாயா சைலண்டாக இருந்து ஒவ்வொருவருக்கும் புரோக்கர் வேலையை பார்த்து கோர்த்து விடுகிறார். இது தெரியாமல் மாயா விரிக்கும் வலையில் ஒவ்வொருவரும் சிக்கி கொள்கிறார்கள். இதையெல்லாம் சுட்டிக் காட்டாத கமல், மாயா செய்யும் தவறுக்கு துணை நிற்கிறார்.

Also read: 7 நாட்களுக்கு மட்டும் அன்ன பாரதி வாங்கிய மொத்த சம்பளம்.. கூப்பிட்டு அசிங்கப்படுத்திய விஜய் டிவி

Trending News