கடந்த சில மாதங்களில் தமிழ் சினிமா ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை சந்தித்த பிரபலம் என்றால் அது அர்ச்சனா தான். கடந்த வருடம் நடைபெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருந்த நல்ல பெயரையும் கெடுத்துக் கொண்டார்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றும்போது அவருக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருந்தது மறுக்க முடியாத ஒன்று. ஆனால் விஜய் டிவிக்கு சென்ற சில நாட்களிலேயே அது பறிபோனது.
ஏகப்பட்ட நெகடிவ் விமர்சனங்கள் அவரை சுற்றி வலம் வர அந்த நேரத்தில் அவருடைய யூடியூப் பக்கத்தில் பாத்ரூம் டூர் என்ற வீடியோ வெளிவர சின்ன யூடியூப் முதல் பெரிய யூடியூப் சேனல்கள் வரை பங்கம் செய்தனர்.
அதை சிரிப்போடு சிரிப்பாக எடுத்துக் கொள்ளாமல் வஞ்சத்தை காட்டுவது போல சில யூடியூப் சேனல்களுக்கு பிரச்சனை கொடுக்கும் வகையில் நடந்து கொண்டார் அர்ச்சனா. இதனால் மேலும் கடுப்பான சிலர் அதையும் சேர்த்து அர்ச்சனாவை வச்சு செய்தனர்.
இந்நிலையில் சமீபத்தில் அர்ச்சனாவுக்கு மூளையில் கட்டி இருந்ததால் ஆபரேஷன் செய்தனர். அதனைத் தொடர்ந்து அவருடைய தொடையில் அறுவை சிகிச்சை செய்ததாகவும் அவரே தெரிவித்துள்ளார். மேலும் ஏகப்பட்ட தையல்கள் வேறு போடப்பட்டுள்ளதாம்.
இதனால் தொகுப்பாளினி பணிக்குச் சென்றால் நீண்ட நேரம் ஒரே இடத்தில் நிற்க வேண்டிய வரும் என்பதால் இனி சில வருடங்களுக்கு தொகுப்பாளினி பணியை தொடர முடியாது என அர்ச்சனா தெரிவித்துள்ளார்.