திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

சும்மா இருந்த சிங்கத்த சுரண்டி விட்ட நிக்சன்.. செம பல்பு கொடுத்த அர்ச்சனா

Biggboss 7: பிக்பாஸ் நிகழ்ச்சி 50ஆவது நாளை நெருங்க இருக்கும் நிலையில் ஆளாளுக்கு கன்டென்ட் கொடுக்கிறேன் என்ற பெயரில் எதையாவது செய்து கொண்டிருக்கின்றனர். அதில் இவ்வளவு நாள் ஐசு பின்னால் சுற்றி வந்த நிக்சன் திடீரென்று ஆவேசமாக மாறிய ப்ரோமோ வெளியாகி உள்ளது.

அதில் விசித்ராவிடம் அவர் வாக்குவாதம் செய்கிறார். அதாவது நான் ஐசுவிடம் பேசியது தப்புன்னா மணி ரவீனாவிடம் பேசுறது விஷ்ணு பூர்ணிமாவிடம் பேசுறது எல்லாம் தப்பு தான். மரியாதையை கொடுத்து மரியாதையை வாங்குங்க என்று எகிறிக் கொண்டிருக்கிறார்.

மேலும் உங்களால தான் அர்ச்சனா கெட்டுப் போகிறார் என்று ஒரு குண்டை போடுகிறார். உடனே பாய்ந்து வந்த அர்ச்சனா நா என்ன கெட்டுப் போனத நீ பார்த்த என கேட்கிறார். உடனே பயந்து போன நிக்சன் ஏதேதோ சொல்லி சமாளிக்கிறார். ஆனாலும் விடாத அர்ச்சனா 40 நாள் ஐசு ஒண்ணுமே பண்ணாததுக்கு நீ தான் காரணம்.

Also read: விசித்ரா மண்டையை கழுவும் மாயா.. என்ன உருட்டுனாலும் அம்மஞ்சல்லிக்கு பிரயோஜனம் இல்ல

எல்லாரும் ஒரு நாள் எலிமினேட் ஆகி போகத்தான் வேணும். அப்ப வெளியில போய் நீ எல்லாத்தையும் பாத்துக்கோ என சரியான பதிலடி கொடுக்கிறார். இதனால் ஆடி போன நிக்சன் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் முழிக்கும் வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.

கடந்த சில நாட்களாகவே நிகழ்ச்சி போராக சென்று கொண்டிருந்த நிலையில் அர்ச்சனா மீண்டும் களத்தில் குதித்து இருப்பது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. சும்மா இருந்த சிங்கத்தை சுரண்டிவிட்ட கதையாக நிக்சன் பல்பு வாங்கியதும் கலாய்க்கப்பட்டு வருகிறது.

Also read: விக்ரம் இல்லன்னா விஷ்ணு.. குள்ளநரி தந்திரத்தை காட்டும் பூர்ணிமா

உண்மையில் அவர் இப்படி நடந்து கொள்வதற்கு பின்னால் மாயா கேங் தான் இருக்கிறது. ஏனென்றால் விசித்ரா, அர்ச்சனா கடுமையான போட்டியாளர்கள் என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரிகிறது. அதனாலயே அவர்களை பிரிக்கும் சூனிய வேலையில் மாயா இறங்கி இருக்கிறார். ஆனால் அர்ச்சனா இதெல்லாம் என்கிட்ட செல்லாது என சரியான பதில் கொடுத்திருக்கிறார்.

Trending News