ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

நிக்சனை நாசுக்காக அசிங்கப்படுத்தி விட்ட அர்ச்சனாவின் அப்பா.. ஆண்டவரும் டோட்டல் டேமேஜ்

Biggboss 7: என்னதான் டிஆர்பிக்காகவும் கன்டன்டுக்காகவும் போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் எல்லை மீறி பேசினாலும் என்றாவது ஒருநாள் சிக்கி விடுவார்கள். அந்த நாள் தான் இன்று நிக்சனுக்கு வந்திருக்கிறது. இவருக்கும் அர்ச்சனாவுக்கும் பிக்பாஸ் வீட்டில் நடந்த சண்டைகள் பெரும் பிரளயத்தை ஏற்படுத்தியது.

அதை கமலும் விசாரித்து தீர்ப்பு கொடுத்தார். ஆனால் அது நேர்மையாக இருந்ததா? என்று கேட்டால் நிச்சயம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். பகிரங்கமாக விடுத்த கொலை மிரட்டலை கூட அவர் சாதாரணமாக தான் கடந்து போனார். அப்படித்தான் நிக்சன் அர்ச்சனாவை கள்ளிப்பால் ஊத்தி கொன்னுருக்கணும் என சொன்னார்.

ஆனால் அதைப்பற்றி ஆண்டவர் கேட்கவே இல்லை. ஆனால் இன்று பிக்பாஸ் வீட்டுக்குள் வரும் அர்ச்சனாவின் அப்பா நிக்சன் மூஞ்சி மேலேயே ஏன் அப்படி சொன்ன என்று கேட்டிருக்கிறார். அந்த வீடியோ தான் இப்போது படு வேகமாக வைரல் ஆகி வருகிறது.

Also read: அதெல்லாம் பேசக்கூடாது, நீ ஏன் அதை சொல்ற.? ஆண்டவர் தலையை உருட்டும் பூர்ணிமா

அவர் இப்படி கேட்டதுமே நிக்சன் ஒன்னும் தெரியாத பிள்ளை போல் நானா அப்படி சொன்னேன் என்று சமாளித்தார். ஆனாலும் அர்ச்சனாவின் அப்பா அது எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது. அந்த மாதிரி எல்லாம் சொல்லாதீங்க என தன்மையாகவே எடுத்து சொன்னார்.

இந்த அளவுக்கு கூட கமல் இதை பற்றி பேசவில்லை. ஆனால் பெற்றவர்கள் சும்மா இருப்பார்களா? அந்த வகையில் அர்ச்சனாவின் அப்பா வேதனையுடன் கூறும்போது கூட நிக்சன் தனக்கு எதுவுமே தெரியாது என்று சமாளிக்கிறார். இருந்தாலும் இந்த அசிங்கம் தேவையா குமாரு அப்படிங்கற மாதிரி தான் இருக்கு.

அந்த அளவுக்கு அர்ச்சனாவின் அப்பா நிக்சனோடு சேர்த்து ஆண்டவரின் இமேஜையும் டேமேஜ் செய்து விட்டார். இப்படியாக இன்றைய எபிசோட் ரணகளமாக ஆரம்பிக்க இருக்கிறது. கடந்த சீசனில் லாஸ்லியாவின் அப்பா, ஷிவானியின் அம்மா என பலரும் செய்த சம்பவத்தை போல் அர்ச்சனாவின் அப்பாவும் செய்துள்ளார்.

Also read: சாத்தான் வேதம் ஓதுதா.? தில்லுமுல்லு செஞ்சி கப்பு வாங்கிட்டு ஓவர் ரவுசு விடும் பிக்பாஸ் வின்னர்

- Advertisement -

Trending News