வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

கங்குவா பட வீழ்ச்சிக்கு அஜித்,விஜய் ரசிகர்கள் காரணமா? தயாரிப்பாளர் பேட்டி, பொங்கி எழுந்த நெட்டிசன்கள்

தமிழ் சினிமாவில் எத்தனையோ படங்கள் வெளியாகி வெற்றி, தோல்வியைச் சந்தித்துள்ளன. ஆனால் சூர்யா – சிவா கூட்டணியில் நவம்பர் 14 ஆம் தேதி வெளியான கங்குவா படத்துக்கு வந்த மாதிரி ஒரு எதிர்மறை விமர்சனங்களும், ரசிகர்களின் கோபமும் இதுவரை யாரும் வெளிக்காட்டியதில்லை என்றே பலரும் கூறி வருகின்றனர்.

சூர்யாவின் நடிப்பு, சிவாவின் இயக்கம் இதைத் தாண்டி புதிய ஒரு உலகைப் படைத்து, அதில் ரசிகர்களை அழைத்துச் செல்ல முயன்றது உண்மையில் பாராட்டிற்குறியது. ஆனால், இத்தனை நெகட்டிவ் விமர்சனங்கள் வந்த பிறகும் அதை அடுத்த படத்தில் சரி செய்ய முயலாமல், ஏன் அடுத்தவர்கள் மீது குறைகூற வேண்டும் என்பது சினிமா விமர்சகர்களின் கேள்வியாக உள்ளது.

இந்த நிலையில், பிரபல தயாரிப்பாளர் தனஞ்செயன் யூடியூப் பேட்டியில், கங்குவா தோல்விக்கு இரண்டு பிரபல நடிகர்களின் ரசிகர்கள்தான் காரணம் என்று கூறியுள்ளது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

யூடியூப் பேட்டியில் தயாரிப்பாளர் தனஞ்செயன் கூறியதாவது:

இதுகுறித்து அவர் கூறியதாவது: ’’நான் 2014 இண்டர்வியூவில் சொல்லியிருப்பேன். சூர்யா சாருக்கு எதிராக ரெண்டு நடிகர்களின் டீம் இயங்கிக் கொண்டிருக்கிறது. அவர்கள் சூர்யா சாரின் படங்களை டார்கெட் பண்ணி அடிப்பாங்க. அந்த நேரத்தில அப்படி நடந்தது என்று சொன்னேன். இவர் அடுத்த லெவலுக்கு வந்துவிடக் கூடாதுன்னு அப்படி டார்கெட் பண்ணி அடிப்பாங்க.

இப்போ, இந்த ரெண்டு நடிகர்களின் ரசிகர்கள் மட்டுமில்லாமல், இப்போது, ரெண்டு அரசியல் கட்சிகளும் சேர்ந்துவிட்டன. இது சமீபத்தில் சூர்யா சாரின் படங்களில் வந்த கருத்துக்களோ, அல்லது, எதோ அவர் சொன்ன விஷயங்கள் அவர்களுக்கு எதிராக இருந்தது. அதுனால இப்போ 4 பேரின் ரசிகர்கள், தொண்டர்களுமே சூர்யாவுக்கு எதிராக இருக்கின்றனர்.

எதற்காக சூர்யாவை டார்கெட் பண்ணுகிறார்கள்? நான் எதோ, பிலாசபிக்கல் பதிவிட்டால் சமூக வலைதளத்தில் பிரபல நடிகரின் போட்டோவை வைத்துள்ள ரசிகர்கள் அப்படி ரியாக்ட் செய்கிறார். அந்த நடிகரின் இடத்தை யாராலும் அடைய முடியாது. அதேபோல் இன்னொரு நடிகரின் இடத்தையும் யாராலும் அடைய முடியாது என்ற போது ஏன் இப்படி டார்கெட் செய்கிறார்கள்’’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

நடிகர்களையும், ரசிகர்களையும் ஏன் குறை சொல்ல வேண்டும்?

கருத்துச் சொல்வது அவரவரின் தனிப்பட்ட விருப்பம். அதேசமயம், சூர்யா பீக்கில் இருந்தபோது, மற்ற நடிகர்களின் படங்கள் தோல்விக்கு சூர்யா ரசிகர்கள் பார்க்காததுதான் காரணம் என யாருமே கூறவில்லை. கூறவும் முடியாது.

அப்படியிருக்க, தான் தேர்ந்தெடுக்கும் கதை, படம், இயக்குனர், தொழில்நுட்பக் கலைஞர்கள் இதெல்லாம் சரியாக இருந்தால் படமும் ஹிட்டாகும். அப்படியிருக்க ஏன் சினிமா துறையில் இருந்துகொண்டே மற்ற முன்னணி நடிகர்களையும், அவர்களின் ரசிகர்களையும் ஏன் இப்படி பேச வேண்டும்? சூர்யா ரசிகர்கள் அப்படி யாரையும் பேசவில்லையா? கருத்துகள் பதிவிடுவதில்லையா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Trending News