திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

நம்ம வீட்டு தயாரிப்பாளர்கள் எல்லாம் இளிச்சவாய்களா.! அட்லீ செய்யும் மட்டமான வேளையில் சிக்கும் நயன்தாரா

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா தற்போது ஜவான் படத்தில் ஷாரூக்கானுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். இயக்குனர் அட்லீ இயக்கிய இப்படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. அதிலும் ஹையோடா என்ற பாடலில் நயன்தாரா, ஷாருக்கானின் ரொமான்ஸ் சற்று தூக்கலாகவே உள்ளது. அதுமட்டுமில்லாமல் நயன்தாரா இப்படத்தின் மூலம் மொத்தமாகவே பாலிவுட்டில் செட்டிலாகி விடலாம் என்ற எண்ணத்தில் உள்ளார்.

இதற்கு முக்கிய காரணம் திருமணமான பின்பு இவரது மொத்த மார்க்கெட்டும் தமிழில் காணாமல் போனது தான். அதுமட்டுமில்லாமல் நயன்தாரா திருமணத்திற்கு முன்பாகவே ஜவான் படத்தில் கமிட்டானதால் தற்போது அவரது நடிப்பு எப்படி இருக்கும் என்பதை பார்க்க மொத்த ஹிந்தி திரையுலகமும் எதிர்பார்த்து காத்துவருகிறது.

Also Read: ஜெயிக்க முடியலன்னு முத்தம், பெட்ரூம் காட்சியில் தாராளம் காட்டும் இளம் நடிகை.. நயன்தாராவுக்கே போட்டின்னு சொன்னீங்க!

இந்த நிலையில், நயன்தாரா பாலிவுட்டில் தனது விசுவாசத்தை காண்பிக்க தமிழ் சினிமாவை துச்சமென நினைத்து ஒரு வேலையை பார்த்து வருகிறார். தமிழில் ராஜா ராணி படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்த நயன்தாரா, அப்படத்தின் வெற்றிக்கு பின் பெண்களை மையமாக வைத்து எடுக்கக்கூடிய படங்களில் நடித்து லேடி சூப்பர்ஸ்டார் ஆனார்.

இப்படி தமிழில் எத்தனையோ படங்களில் நடித்தாலும், அவரது படங்களின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாமல் டிமிக்கி கொடுக்கும் நயன்தாரா, விருது வாங்கும்போது மட்டும் விருது மேடைகளில் முதல் ஆளாக ஏறி விருதுகளை வாங்குவார். இவர் செய்யும் இந்த செயல் சர்ச்சையான நிலையில், ஏன் ப்ரோமோஷன்களில் கலந்துக்கொள்ளமாட்டிகிறீர்கள் என்ற கேள்வியும் அவர் முன் வைக்கப்பட்டது.

Also Read: சூப்பர் ஸ்டாருடன் ஜோடி போட்ட நயன்தாராவின் 4 படங்கள்.. இரண்டாவது படத்திலேயே எகிறிய மார்க்கெட்

அதற்கு பதிலளித்த நயன், நான் பட ப்ரோமோஷன்களில் கலந்துக்கொண்டு அந்த படம் தோல்வியடைந்தால் என்னால் அதை தாங்கிக்கொள்ள முடியாது. இதற்காக தான், ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள விரும்புவதில்லை என பதிலளித்தார். ஆனால் தற்போது இந்த நிலைப்பாட்டை ஜவான் படத்துக்காக நயன்தாரா மாற்றியுள்ளது தற்போது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது.

ஹிந்தியில் தொடர்ந்து பட வாய்ப்புகள் வேண்டும் என்பதற்காக ஜவான் பட ப்ரோமோஷனில் ஷாரூக்கானுடன், நயன்தாரா இணைந்து இப்படம் குறித்து பல இடங்களுக்கு சென்று பேச உள்ளார். ஆனால் இதை ஏன் தமிழில் பெரிய நடிகர்களுடன் நடிக்கும்போது செய்யவில்லை என்றும் அப்போதென்றால் நயன்தாரா தேவைக்காக மட்டும் தமிழ் சினிமாவை பயன்படுத்திக்கொண்டு தற்போது காசுக்காக பாலிவுட்டுக்கு மட்டும் விசுவாசமாக இருப்பது ஏற்புடையதல்ல என நெட்டிசன்கள் கொந்தளித்து வருகின்றனர்.

Also Read: அஸ்திவாரத்தை ஸ்ட்ராங்காக போடும் நயன்தாரா.. பொண்டாட்டியை சந்தேகத்தோடு சுற்றி வரும் விக்கி

Trending News