வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

வெந்து தணிந்தது காடு 5 மணி ஷோ பாக்க போறீங்களா.? பயமுறுத்தி அறிக்கை வெளியிட்ட கவுதம் மேனன்

கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்திருக்கும் வெந்து தணிந்தது காடு திரைப்படம் நாளை மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாக இருக்கிறது. மாநாடு திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு சிம்புவின் நடிப்பில் இப்படம் வெளியாக இருப்பதால் அவருடைய ரசிகர்கள் இந்தப் படத்தை ஆவலுடன் கொண்டாட காத்திருக்கின்றனர்.

இந்தப் படத்தின் போஸ்டர் மற்றும் ட்ரெய்லர் அனைத்தும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது படத்தை பார்க்கும் ஆவலும் அனைவருக்கும் அதிகரித்துள்ளது. இப்படத்தின் முதல் காட்சி காலை 5 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்து விட்டதாம்.

Also read:சிம்புவுடன் இணைந்த சிவகார்த்திகேன், யாருமே எதிர்பார்க்கலல்ல.. சண்டைனா அது ஃபேன்ஸ் மட்டும் தான், நாங்க இல்ல

இந்நிலையில் படத்தின் பிரமோஷனில் பிசியாக இருக்கும் கௌதம் மேனன் தற்போது ஒரு புதிய தகவலை ரசிகர்களுக்கு கூறியிருக்கிறார். படம் தொடர்பாக பல தகவல்களை கூறியிருக்கும் அவர் இந்த படத்தின் முதல் காட்சியை பார்க்கும் ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோளையும் வைத்திருக்கிறார்.

அது என்னவென்றால் படத்தை பார்க்க வரும் ரசிகர்கள் முதல் நாள் இரவு நன்றாக தூங்கிவிட்டு வரவும் என்று அவர் கூறியிருக்கிறார். ஏனென்றால் இப்படம் முற்றிலும் வித்தியாசமான கோணத்தில், மாறுபட்ட கதைக்களத்தை கொண்டு எடுக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

Also read:வெந்து தணிந்தது காடு இண்டர்வல் பிளாக், கிளைமாக்ஸை பற்றி வாய் திறந்த சிம்பு

அதனால் கதை ஓட்டம் மற்றும் கதாபாத்திரங்களை பற்றி புரிந்து கொள்வதற்கு ரசிகர்களுக்கு அதிக நேரம் எடுக்கும். அதனால் குழப்பம் ஏற்படாமல் இருக்க ரசிகர்கள் நல்ல உற்சாகமான மனநிலையில் வர வேண்டும் என்று அவர் கூறியிருக்கிறார்.

அவர் கூறிய இந்த தகவல் ரசிகர்களுக்கு புதுவிதமான குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே இப்படி கூறினால் படத்தை பற்றிய நெகட்டிவ் விமர்சனங்கள் தான் வரும் என்ற கவலையும் சிம்புவின் ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது. எது எப்படி இருந்தாலும் இந்த படத்தை அதிரி புதிரியாக கொண்டாடுவதற்கு அவர்கள் இப்போதே தயாராகி விட்டனர்.

Also read:படு உஷாரான சிம்பு.. தனுசை வைத்து நகர்த்திய காய்

Trending News