Sun Tv : சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியல் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்று வருகிறது. இதில் சஞ்சீவ் மற்றும் சைத்ரா ரெட்டி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
இந்த சூழலில் கயல் தொடரில் மூர்த்தி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் ஐயப்பன். விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் தொடரின் மூலம் மிகவும் பிரபலமானவர்.
இப்போது ஐயப்பன் மனைவி கயல் தொடரின் சூட்டிங் ஸ்பாட்டுக்கே வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். அதாவது ஐயப்பன் பிந்தியா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.
கயல் தொடரில் நடிக்கும் நடிகரின் மனைவி வாக்குவாதம்
இவர்களுக்கு திருமணம் ஆகி 15 வருடங்கள் ஆகிறது. கடந்த சில மாதங்களாக ஐயப்பன் வீட்டின் செலவுக்கு பணம் கொடுக்கவில்லை என்றும் மூன்று மாதங்களாக வீட்டின் பக்கமே வரவில்லை என்று அவரது மனைவி கூறியிருக்கிறார்.
மேலும் கயல் தொடரால் என் வாழ்க்கையை நாசமா போச்சு. அந்தத் தொடர் எங்களுக்கு வேண்டாம், ஐயப்பன் அதில் நடிக்க வேண்டாம் என்று அவரது மனைவி கண்ணீர் மல்க மீடியாவுக்கு பேட்டி கொடுத்திருக்கிறார்.
மேலும் ஐயப்பன் தன்னை துன்புறுத்துவதாகவும் கூறியிருந்தார். சீரியலின் நிர்வாக தரப்பிலிருந்து இது போன்ற பிரச்சனை இங்கு செய்யக்கூடாது, உங்க குடும்ப விஷயத்த இங்க கொண்டு வராதீங்க என்று கண்டித்துள்ளனர்.