அறிஞர் அண்ணா ஒரு அரசியல்வாதி என்பது பலருக்கு தெரியும் இவர் வளர்த்து வைத்த கட்சி தான் இப்போது இரு துருவங்களாக பிரிந்து செயல்பட்டு வருகின்றனர். அன்றைய காலத்தில் அறிஞர் அண்ணா பல அரசியல்வாதிகளுக்கும் முன்னோடியாக உள்ளார்.
அறிஞர் அண்ணா தான் முதலில் திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை உருவாக்கினார். அப்போது எம்ஜிஆர் மற்றும் கலைஞர் இருவருமே ஒரே கட்சியில் தான் இருந்துள்ளனர்.
அதன் பிறகு கலைஞர் செய்த சில செயல்கள் பிடிக்காததால் எம்ஜிஆர் அக்கட்சியிலிருந்து விலகி அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என தனியாக ஆரம்பித்தார்.
அறிஞர் அண்ணா காங்கிரசுடன் கூட்டணி அமைத்து தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கினார். அப்போது கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டார் அண்ணா. ஆனால் கண்ணதாசனால் நேரடியாக அவரை போய் சந்திக்க முடியவில்லை.
அப்போது தான் கண்ணதாசனுக்கு தில்லானா மோகனாம்பாள் படத்தில் பாடல் எழுதுவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனை பயன்படுத்திக் கொண்ட கண்ணதாசன் அறிஞர் அண்ணாவை நலம் விசாரிக்கும் வகையில் நலம்தானா பாடலை எழுதியுள்ளார்.
“நலந்தானா” பாடல் இன்று வரைக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரிதாக பேசப்படும் கொண்டாடப்பட்டு தான் வருகிறது. ஆனால் இப்பாடலுக்கு இப்படி ஒரு காரணம் இருப்பது பலருக்கும் தெரியாது. அதுமட்டுமில்லாமல் அறிஞர் அண்ணாவும் கண்ணதாசனும் நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.