
எதிர்நீச்சலில் இப்பொழுதுதான் காற்று நல்லவிதமாய் வீசுகிறது. ஒரு சப்போர்ட் இல்லாமல் துடித்து வந்த வீட்டு மருமகளுக்கு இன்ஸ்பெக்டர் குற்றவை ஒரு தூண் போல் நின்று உதவி செய்கிறார். பார்கவி குடும்பத்திற்கும் நியாயம் கிடைக்க போராடி வருகிறார்.
எப்பொழுதுமே துள்ளி கொண்டு திரியும் மல்லுவேட்டி மைனர் கதிர் மறைமுகமாக வீட்டுக்கு தெரியாமலேயே பல காரியங்கள் செய்து வருகிறார். குணசேகரனுக்கு தெரியாத அவரின் கண்ணுக்கு அப்பாற்பட்ட சொத்துக்களை மாமனார் மற்றும் ஆடிட்டர் உதவியுடன் விற்று வருகிறார்.
குணசேகரன் தன்னை நம்புகிறார் என ஆடி வந்த கதிருக்கு இப்பொழுது ஆப்பு ரெடியாகிவிட்டது. நேற்றைய எபிசோடில் குணசேகரன் ஞானத்தை முக்கியமான வேலைக்காக வெளியே அனுப்பி உள்ளார். இதை அவர் வீட்டில் கூறியதும் கதிருக்கு பொறி தட்டுகிறது.
என்ன முக்கியமான வேலையாக இருக்கும் என தனது திருட்டு முழியை உருட்டி உருட்டி யோசிக்கிறார். இதை அறிவுக்கரசி கரெக்டாக நோட் பண்ணுகிறார். எங்கே நமது திருட்டுத்தனம் அனைத்தும் வெளிவந்து விடுமோ என கதிர் பயந்து நடுங்கி நிற்கிறார்.
ஏற்கனவே குணசேகரன் தன்னுடைய முழு சொத்துக்கும் வாரிசு தர்ஷன் தான் கூறியதுமே கதிர் மனதில் இருக்கும் வில்லத்தனம் வெளியே வருகிறது. மொத்த சொத்துக்கும் ஆசைப்படும் அவருக்கு சரியான ஆப்பு வைக்கப் போகிறார் பெரிய மைனர் குணசேகரன்.