அர்ஜுன் நடிப்பில் வெளியான பிரண்ட்ஷிப் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன்பிறகு அர்ஜுன் சில படங்களில் நடித்து வருகிறார். தற்போது அர்ஜுன் தனது மகளை வைத்து ஒரு புதிய படத்தை இயக்கி வருகிறார்.
இந்த புதிய படத்திற்காக அர்ஜுன் ஐதராபாத்தில் ஷூட்டிங் செய்து வருகிறார். ஆனால் அர்ஜுன் ஏற்கனவே தமிழில் தீயவர் கொலை நடுங்க எனும் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அர்ஜுன் நடிக்க வேண்டிய ஒரு சில காட்சிகள் மட்டும் இருந்துள்ளன இதற்காக படக்குழுவினர் சென்னையில் மிகப்பெரிய அளவில் இன்டோர் செட் போட்டு அர்ஜுனை படத்தில் நடிக்க அழைத்துள்ளனர்.
ஆனால் அர்ஜுன் தனது மகளை வைத்து ஹைதராபாத்தில் புதிய படத்தை எடுத்து வருவதால் என்னால் சென்னைக்கு வந்து படப்பிடிப்பில் கலந்து கொள்ள முடியாது நீங்கள் வேண்டுமானால் ஹைதராபாத்தில் வாருங்கள் என கூறியுள்ளார். அர்ஜுன் மட்டும் சென்னைக்கு வந்திருந்தாள் பெரிய அளவில் பொருட்செலவு ஏற்படாது.
ஆனால் ஒட்டுமொத்த குழுவையும் ஒரு சில காட்சிகளுக்காக ஹைதராபாத் வர சொல்வது சரியாக இருக்காது என படக்குழுவினர் கூறியுள்ளனர். அதாவது கேமராமேன் ஆஸ்டன் டைரக்டர் உட்பட 90க்கும் மேற்பட்டோருக்கு ஹைதராபாத்துக்கு அழைத்துச் செல்வது அங்கு விடுதியில் தங்க வைப்பது உட்பட அனைத்து செலவுகளையும் பார்க்கும் போது சென்னையில் படப்பிடிப்பு நடத்துவதை விட அதிகமான பொருட்செலவில் ஏற்படுகிறது என படக்குழுவினர் கூறியுள்ளனர்.
ஆனால் அர்ஜுன் என்னால் சென்னைக்கு வர முடியாது என மறுத்துள்ளார். அதற்கு படக்குழுவினர் இன்னும் மூன்றே மூன்று காட்சியில் மட்டும் தான் நடிக்க வேண்டியிருக்கிறது நீங்கள் வந்தீர்கள் என்றால் ஒரே நாளில் படப்பிடிப்பை நடத்தி முடித்து விடுவோம் அதன்பிறகு நீங்கள் ஹைதராபாத் செல்லலாம் என கூறியுள்ளனர். ஆனால் அர்ஜுன் சென்னைக்கு வர மறுத்துள்ளது எடுத்து தற்போது படக்குழுவினர் வேறு வழியின்றி ஹைதராபாத் சென்றுள்ளனர்.
இதற்கு பலரும் அர்ஜுன் மீது பல்வேறு விமர்சனங்கள் வைத்து வருகின்றனர். அதாவது ஒரு சில காட்சிகளுக்காக பெரிய நடிகர்கள் கூட வந்து படப்பிடிப்பில் கலந்து கொள்கின்றனர். ஆனால் தற்போது மார்க்கெட்டை இல்லாமல் இருக்கும் அர்ஜுன் சென்னைக்கு வர மறுத்துள்ளது பலருக்கு கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.