ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

அடுத்த படத்தில் நடிக்க தயாரான அர்ஜுன் தாஸ்.. மகிழ்ச்சியில் இருக்கும் படக்குழு

நடிகர் அர்ஜுன் தாஸ் தமிழ் கைதி மாஸ்டர் அந்தகாரம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், இவரது குரலுக்காகவே இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். கைதி படத்தில் இவங்க தலையை கொண்டு வர்றவங்களுக்கு லைஃப் டைம் செட்டில்மெண்ட் என இவர் பேசும் ஒரு டயலாக் மிகவும் பிரபலம்.

இவர் தற்போது மலையாள படமான கப்பேலா ரீமேக்கின் மூலம் தெலுங்கில் அறிமுகமாகிறார். முகம்மது முஸ்தபா இயக்கத்தில் வெளியான கப்பேலா படத்தை விஷ்ணு வேணு தயாரித்துள்ளார். இந்தப் படத்தில் அன்னா பென், ஸ்ரீநாத் பாஸி, ரோஷன் மேத்யூ உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

தற்போது இப்படத்தின் தெலுங்கு ரீமேக் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. செளரி சந்திரசேகர் ரமேஷ் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் சித்து ஜொன்னலகட்டா, அர்ஜுன் தாஸ் இருவரும் ஹீரோவாக நடிக்கவுள்ளனர்.

arjun-das-master-cinemapettai
arjun-das-master-cinemapettai

அன்னா பென் கதாபாத்திரத்தில் நடிக்கப் பல்வேறு நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். படம் மூலமாக அர்ஜுன் தாஸ் முதன்முறை நேரடி தெலுங்கு படத்தில் அறிமுகமாக உள்ளார். தமிழில் கைதி, மாஸ்டர் போன்ற படங்களுக்கு கிடைத்த அதே வரவேற்பு தெலுங்கிலும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்தை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending News