திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

சைக்கோ ஹீரோவாக அவதாரம் எடுத்த அர்ஜுன் தாஸ்.. கொலைவெறியுடன் வெளியான ட்ரெய்லர்

Aneethi Movie Trailer: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த கைதி படத்தில் அன்பு என்ற கேரக்டரில் வில்லனாக மிரட்டியவர் தான் நடிகர் அர்ஜுன் தாஸ். இவரின் உரத்த குரலை கேட்பதற்கென்று தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது. இவர் ஹீரோவாக அநீதி என்ற படத்தில் அவதாரம் எடுத்திருக்கிறார்.

நீண்ட நாட்களாக நடைபெற்ற இந்த படத்தில் படப்பிடிப்பு நிறைவடைந்து படத்தை வரும் ஜூலை 21ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் செய்கின்றனர். இந்த படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதில் அர்ஜுன் தாஸ் சைக்கோ தனமான கதாநாயகனாக நடித்துள்ளார்.

Also Read: விஜய்யுடன் நடித்து சோலி முடிந்த 5 நடிகர்கள்.. கடைசியில் அண்ணன், சித்தப்பா கேரக்டர் தான் போல

இதில் இவர் நடிகை துஷாரா விஜயனுடன் செய்யும் ரொமான்ஸ் காட்சிகள் பார்ப்பதற்கே அழகாக இருக்கிறது. இது படம் முழுவதும் இருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால் ஒரு கட்டத்தில் அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கக்கூடிய அர்ஜுன் தாஸ் கொடூரமாக மாறிவிடுகிறார்.

இதில் அர்ஜுன் தாஸ் ஃபுட் டெலிவரி பாய் கேரக்டரில் நடித்துள்ளார். இந்த படத்தை சைக்கோ திரில்லர் ஜானரில் உருவாக்கியுள்ளனர். இந்த படத்தை ஷங்கரின் அசிஸ்டன்ட் டைரக்டரான வசந்தபாலன் இயக்கியிருக்கிறார். இதற்கு முன்பு இவர் அங்காடி தெரு, அரவான், காவியத்தலைவன், ஜெயில் போன்ற படங்களையும் இயக்கி உள்ளார்.

Also Read: சொதப்பலில் லோகேஷின் சூப்பர் ஹிட் படம்.. எல்லாத்தையும் மாற்றி சோலிய முடிக்க போகும் இயக்குனர்

இதுவரை மென்மையான கதைகளை மட்டுமே இயக்கிக் கொண்டிருந்த வசந்தபாலன் ‘அநீதி’ படத்தின் மூலம் வித்தியாசமான முறையில் கம் பேக் கொடுக்கப் போகிறார். இந்தியாவை முழுக்க முழுக்க தனியார் மையமாக ஆக்கிவிட பார்த்தால், இனிமேல் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற போர்டுதான் வைக்க வேண்டும் என்ற வசனம் ட்ரைலரில் இடம் பெற்று பலரையும் ஈர்த்துள்ளது.

இதுவரை கொடூர வில்லனாகவே அர்ஜுன் தாஸை பார்த்த ரசிகர்களுக்கு இந்த படத்தின் மூலம் ரொமான்டிக் ஹீரோவாக பார்ப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அதே சமயம் அவருடைய குரலுக்கும் முக பாவனைக்கும் ஏற்ப கொடூரமான சைக்கோ ஹிரோவாகவும் மறுபுறம் நடித்து அசத்தி இருக்கிறார். இந்த படத்தை திரையரங்கில் பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

அநீதி படத்தின் டிரைலர் இதோ!

Also Read: மாவீரனுக்கு போட்டியாக அடுத்தடுத்து ரிலீஸ் ஆகும் 4 படங்கள்.. பதட்டத்துடன் இருக்கும் சிவகார்த்திகேயன்

Trending News