தமிழ் சினிமாவில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற கைதி படம் மூலம் தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமானவர்தான் அர்ஜுன் தாஸ். ஒரே படம் மூலம் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் தன்வசம் ஈர்த்த பெருமை இவரையே சேரும்.
கைதி படத்தில் அர்ஜூன் தாஸின் கதாபாத்திரம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதிலும் குறிப்பாக அவரது கனமான குரலில் அவர் பேசிய வசனங்கள் அனைத்தும் ஹிட்டானது. கைதி படத்தில் அர்ஜுன் தாஸ் பேசிய “இவன் தலையை கொண்டு வருபவனுக்கு லைஃப் டைம் செட்டில்மெண்ட் ரா” என்ற வசனம் இன்றுவரை புகழ் பெற்றுள்ளது.
கைதி படத்தின் வெற்றியை தொடர்ந்து மாஸ்டர் படத்தில் விஜய்யுடன் சேர்ந்து நடித்தார். ஆனால் அர்ஜூன் தாஸின் முதல் படம் கைதி அல்ல. அர்ஜுன் தாஸ் நடிப்பில் 2014ஆம் ஆண்டிலேயே வெளிவர வேண்டிய அந்தகாரம் படம் பண பிரச்சனை காரணமாக கடந்தாண்டு ஓடிடியில் வெளிவந்தது. இருப்பினும் இப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அர்ஜுன் தாஸ் ரசிகர்களின் கேள்விக்கு அவ்வபோது பதிலளித்து வருவார். இந்நிலையில் ரசிகர் ஒருவர் ‘தல எனக்கு ஒரு ஹாய் சொல்லுவீங்களா’ என்று கேட்டதற்கு, நான் முடிந்தவரை அனைவருக்கும் பதில் அளிக்க விரும்புகிறேன். ரசிகர்களுக்கு பதில் சொல்வதில் எந்த ஏற்றத்தாழ்வும் பார்ப்பதில்லை என்று பதிலளித்துள்ளார்.
இதேபோல் கடந்த மாதம் உங்களுடைய குரலுக்காக நிராகரிக்கப்பட்டுள்ளீர்களா? என்ற கேள்விக்கு ‘நிறைய முறை நடந்துள்ளது’ என்று பதிலளித்தார். இந்த பதிலை கேட்ட ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் தற்போது அர்ஜூன் தாஸின் பலமே அவரது குரல் தான். அந்த குரலுக்காகவே அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் குரலுக்காக அவர் நிராகரிக்கப்பட்டது சற்று அதிர்ச்சி அளிப்பதாக ரசிகர்கள் கூறியுள்ளனர்.