வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

அவர் இல்லைனா எனக்கு இது கிடைச்சிருக்காது.. நன்றியுடன் திரும்பி பார்க்க வைத்த அர்ஜுன் தாஸ்

தமிழ் சினிமாவில் தற்போது அனைவரும் விரும்பப்படும் ஒரு வில்லன் நடிகராக ரசிகர்களை கவர்ந்திருப்பவர் நடிகர் அர்ஜுன் தாஸ். ஒரு சில திரைப்படங்களில் இவர் நடித்திருந்தாலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த கைதி திரைப்படம் தான் அவருக்கு ஒரு மிகப்பெரிய அடையாளத்தை கொடுத்தது.

அன்பு என்ற கதாபாத்திரத்தில் நடித்த இவருடைய நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. இவர் மறைந்த வில்லன் நடிகர் ரகுவரனை போன்று இருப்பதும் ரசிகர்களை ரொம்பவே கவர்ந்தது. அந்த வகையில் இவர் மீண்டும் லோகேஷ் கனகராஜ், விஜய்யுடன் இணைந்து மாஸ்டர் திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

தற்போது வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் விக்ரம் திரைப்படத்தில் இவர் வரும் அந்த ஒரு காட்சிக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்படி கொஞ்சம் கொஞ்சமாக பிரபலமாக மாறி இருக்கும் அர்ஜுன் தாஸ் பாலிவுட்டிலும் களம் இறங்க உள்ளார்.

இங்கு அசத்தல் வில்லனாக நம்மை மிரட்டிய அர்ஜுன் தாஸ் ஹிந்தியில் ஹீரோவாக ஒரு திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இவர் அங்கமாலி டைரிஸ் என்ற மலையாள படத்தின் ஹிந்தி ரீமேக்கில் தான் நாயகனாக அறிமுகமாக உள்ளார்.

இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்ததும் அவர் இந்த விஷயத்தை தனக்கு இப்படி ஒரு அடையாளத்தை கொடுத்த லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய் இருவருக்கும் கூறியிருக்கிறார். மேலும் மாஸ்டர் திரைப்படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்த பிறகுதான் அவர் அதிக அளவில் பிரபலமானதாகவும் கூறியிருக்கிறார்.

அதனால்தான் பாலிவுட்டில் அறிமுகமாகும் வாய்ப்பு அவருக்கு கிடைத்திருக்கிறது. அந்த நன்றியை மறக்காமல் அவர் இந்த விஷயத்தை முதன்முதலாக விஜய், லோகேஷ் கனகராஜிடம் தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது அர்ஜுன் தாஸ் ஹிந்தியில் அறிமுகமாக இருக்கும் செய்தி அவருடைய ரசிகர்களை மிகுந்த மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. மேலும் இதைக் கேள்விப்பட்ட பலரும் அவருக்கு தங்களுடைய வாழ்த்துக்களை சோசியல் மீடியாவில் தெரிவித்து வருகின்றனர்.

Trending News