மௌனகுரு மற்றும் மகாமுனி படங்களை இயக்கிய சாந்தகுமாரின் இயக்கத்தில் உருவாகி இருக்கிறது ரசவாதி. கொடைக்கானலில் சித்தா டாக்டராக பணிபுரிந்த வருபவர் சதாசிவ பாண்டியன் (அர்ஜுன் தாஸ்). அங்கு அருகில் உள்ள ஹோட்டலில் மேனேஜராக சூர்யா என்ற கதாபாத்திரத்தில் தன்யா ரவிச்சந்திரன் நடித்திருக்கிறார்.
இவர்கள் இருவரின் கடந்த கால வாழ்க்கை மிகவும் மோசமாக அமைந்திருக்கிறது. அதற்கான பிளாஷ்பேக் காட்சிகள் இரண்டாம் பாதியில் காட்டப்படுகிறது. மேலும் இருவரும் ஒருவருக்கு ஒருவர் காதலிக்க தொடங்குகின்றனர். இந்நிலையில் அங்கு இன்ஸ்பெக்டராக பரசுராஜ் அதாவது சுஜித் சங்கர் என்ட்ரி கொடுக்கிறார்.
பரசுராஜுக்கு சூர்யா மீது விருப்பம் ஏற்படுகிறது. ஆனால் அவரோ சதாசிவ பாண்டியனை தான் காதலிக்கிறார் என்பது இன்ஸ்பெக்டருக்கு தெரிய வருகிறது. இதனால் பரசுராஜ் மற்றும் சதாசிவ இடையே ஒரு மிகப்பெரிய சண்டையே நடக்கிறது. தொடர்ந்து சதாசிவத்திற்கு நெருக்கடி கொடுத்து வருகிறார் இன்ஸ்பெக்டர்.
சித்தா டாக்டராக அர்ஜுன் தாஸ்
இதற்கு காரணம் சூர்யா மீது உள்ள விருப்பம் மட்டுமல்ல ஆழமான வேறு ஒரு காரணம் இருப்பதை சதாசிவ உணர்கிறார். அது என்ன காரணம், கடைசியில் சூர்யா மற்றும் சதாசிவ பாண்டியன் இணைந்தார்களா என்பது தான் ரசவாதி. இப்படத்தை திரில்லர் கலந்த கதை களத்துடன் கொடுத்திருக்கிறார் இயக்குனர் சாந்தகுமார்.
படத்திற்கு பிளஸ் பாயிண்ட் என்னவென்றால் அர்ஜுன் தாஸ். அதிக சிரமமின்றி எதார்த்தமாக இந்த கதாபாத்திரத்தை கொடுத்திருக்கிறார். அவரது பேச்சு மற்றும் உடலின் மொழி பக்கவாக பொருந்துகிறது. அதேபோல் இன்ஸ்பெக்டராக நடித்த சுஜித் சங்கரும் அபாரம்.
படத்தில் மைனஸ் என்றால் கதாநாயகி தனியாக ரவிச்சந்திரனின் கதாபாத்திரம் ரசிகர்கள் உடன் கனெக்ட் ஆகவில்லை. மேலும் மிகுந்த பொறுமை இருந்தால் மட்டுமே இந்த படத்தை பார்க்க முடியும். வேகத்தை விரும்பும் ரசிகர்களுக்கு இந்த படம் ஏமாற்றம்தான்.
ஆனாலும் நல்ல அழுத்தமான கதையை கொடுத்திருக்கிறார் சாந்தகுமார். நேரம் மற்றும் பொறுமை இருந்தால் கண்டிப்பாக ரசவாதி படத்தை பார்க்கலாம்.
சினிமாபேட்டை ரேட்டிங் : 3/5