ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

இந்த ஒரே காரணத்தினால் பட வாய்ப்பை இழந்த அர்ஜுன் தாஸ்.. ஆனால் தற்போது மார்க்கெட் உயர காரணமே இதுதான்

நடிப்பில் திறமை இருந்தாலும் குரல், தோற்றம் சரியில்லை என்று சினிமாவில் நிராகரிக்கப்பட்டவர் நிறைய பேர். அந்த வகையில் கனத்த குரலில் கம்பீரமாகப் பேசி ஒரே படத்தில் ரசிகர் மனதில் இடம்பிடித்தவர் அர்ஜுன் தாஸ்.

கைதி என்ற படத்தில் வில்லனாக நடித்து, ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. எங்கு சென்றாலும் இப்படத்தின் வசனத்தை பேசும்படி ரசிகர்கள் நச்சரித்து விடுவார்களாம்.

இணையதளத்தில் ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ளார் , உங்கள் குரலால் நீங்கள் நிராகரிக்கப்பட்டது உண்டா.? என ரசிகர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ளார் அர்ஜுன் தாஸ்.

கண்டிப்பாக, நான் சினிமாவில் வருவதற்கு முன்பாக ஒரு இயக்குனரிடம் கிட்டத்தட்ட 2 மணி நேரம் பேசியதாகவும் கதாநாயகனாக உறுதி செய்து விட்டார்கள் என்று நம்பினேன். ஆனால் இறுதி கட்டத்தில் உங்கள் குரல் வளம் வில்லனுக்காகவே மட்டுமே பொருந்தும் என்று கூறி ஒதுக்கி விட்டார்.

அதே இயக்குனர் கைதி படம் பார்த்த பின்பு என்னை தொலைபேசியில் அழைத்து உங்களின் கம்பீரமான குரல் தான் உங்களுக்கு இருக்கும் பாசிட்டிவானது என்று வாழ்த்தி உள்ளார்.

arjun-das-cinemapettai
arjun-das-cinemapettai

இப்படி தனக்கு நெகட்டிவான ஒரு விஷயத்தை பாசிட்டிவாக மாற்றி அர்ஜுன் தாஸ் வெற்றி பெற்ற ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த அந்தகாரம், மாஸ்டர் போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. தற்போது வசந்தபாலன் இயக்கத்தில் கதாநாயகனாக அர்ஜுன் தாஸ் நடித்து வருகிறார் என்பது  இன்னும் சுவாரசியம் தான்.

Trending News