திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

என்னையும் படுக்க கூப்பிட்டாங்க.. அதிர்ச்சி கொடுத்த அர்ஜுன் பட நடிகை

சினிமா வட்டாரங்களில் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் சம்பவங்கள் ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆரம்பத்தில் இந்த மாதிரி பிரச்சினைகளை சந்தித்து முன்னேறிய நடிகைகள் பலரும் தங்களுடைய கடைசி காலகட்டங்களில் அதைப்பற்றிச் சொல்லி பரபரப்பை ஏற்படுத்துவார்கள்.

அந்த வகையில் அர்ஜுன் படத்தில் நடித்த நடிகை ஒருவர் சமீபத்தில் தென்னிந்திய சினிமா வட்டாரங்களில் நடிகைகளை ஓபன் ஆகவே படுக்கைக்கு அழைக்கும் வேலை அதிகமாக நடந்து கொண்டிருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். ஏற்கனவே அர்ஜுன் படம் நடிகை ஒருவர் அர்ஜுன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என பேசியது நினைவிருக்கலாம்.

இந்த நேரத்தில் அர்ஜுன் படத்தில் நடித்த நடிகை அர்ஜுன் பெயரை சொல்லாமல் பொதுவாக இந்த விஷயத்தை கூறியுள்ளது கொஞ்சம் அதிர்ச்சிதான். அவர் வேறு யாரும் இல்லை. மூன்று பேர் மூன்று காதல் படத்தில் நடித்த சுர்வீன் சாவ்லா என்பவர்தான்.

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த இந்த நடிகை மூன்று பேர் மூன்று காதல் படத்தில் மட்டுமல்லாமல் அர்ஜுன் இயக்கி தயாரித்து நடித்த ஜெய்ஹிந்த் 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த நடிகைக்கு தமிழ் சினிமாவில் வட்டாரங்களில் படுக்கை அறைக்கு அதிகமாக இருந்ததாக கூறி பரபரப்பையும் பெரிய குற்றச்சாட்டையும் வைத்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் ஒரு படத்திற்கு அழைத்தபோது உங்களுடைய இடை அளவு என்ன, மார்பு அளவு என்ன என கொஞ்சம் அசிங்க அசிங்கமாக கேட்டதாகவும் தெரிவித்துள்ளார். இந்த விஷயம் தான் தற்போது சினிமா வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவை மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமாவையும் இந்த நடிகை பகைத்துக் கொண்டார் என்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.

Trending News