1993 ஆம் ஆண்டு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற ஜென்டில்மேன் படத்தில் முதன் முதலில் நடிக்க இருந்த நடிகர் வேறு ஒருவர் என்ற செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இன்று பிரம்மாண்ட இயக்குனர் என அனைவராலும் கொண்டாடப்படும் சங்கர் இயக்குனராக அறிமுகமான திரைப்படம் ஜென்டில்மேன். முதல் படமே பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது.
ஏ ஆர் ரகுமான் இசையில் வெளியான அனைத்து பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. மேலும் சிறந்த காமெடி ஜோடியான கவுண்டமணி செந்தில் காமெடி ரசிகர்களின் கைதட்டல்களை அள்ளியது.
வினித், சரன் ராஜ், ஆச்சி மனோரமா, நம்பியார் என ஒவ்வொரு கதாபாத்திரமும் ரசிகர்கள் மனதில் பசுமரத்தாணி போல் பதிந்தது. இப்படி சூப்பர் ஹிட்டடித்த ஜென்டில்மேன் படத்தை அன்றைய பிரமாண்ட தயாரிப்பாளர் கேடி குஞ்சுமோன் தயாரித்திருந்தார்.
ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்ற ஜென்டில்மேன் படத்தில் முதன்முதலில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமானவர் நடிகர் சரத்குமார் தானாம். ஜென்டில்மேன் படத்தில் மீசையை எடுக்க வேண்டும் என்பதற்காக ஜென்டில்மேன் படத்தை நிராகரித்து விட்டாராம்.
அதற்கு காரணம் சங்கரின் குரு பவித்ரன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருந்ததாராம். அந்த படத்திற்காக மீசை வளர்க்க வேண்டிய கட்டாயம் இருந்ததால் ஜென்டில்மேன் படத்தை தவிர்த்து விட்டதாகவும் சரத்குமார் டூரிங் டாக்கீஸ் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.