திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

மங்காத்தா போல் லியோ-வில் சொல்லி அடிக்கப் போகும் அர்ஜுன்.. பாட்ஷா பட சாயலில் வெளிவந்த கதை

லியோ திரைப்படத்தின் அறிவிப்பு வெளிவந்த நாள் முதலிலிருந்தே அதுதான் சோசியல் மீடியாவை முழுவதுமாக ஆக்கிரமித்து இருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் இப்படத்தின் சூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அதனாலேயே இப்படத்திற்கான எதிர்பார்ப்பும் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. அதற்கேற்றார் போல் பட குழுவும் ஏதாவது ஒரு அப்டேட்டை கொடுத்துக் கொண்டே இருக்கின்றனர். இந்நிலையில் இந்த படத்தின் கதை இதுதான் என்ற ஒரு தகவல் வெளிவந்துள்ளது. அதாவது இப்படத்தில் அர்ஜுன் முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று பேசப்பட்டது.

Also read: கொடூரமாக நடிக்கும் அர்ஜுன்.. இணையத்தில் லீக் ஆன லியோ படத்தின் முக்கிய கதாபாத்திரம்

ஆனால் அது உண்மை கிடையாதாம். ஏனென்றால் படத்தில் அவர் விஜய்க்கு மிகவும் நெருங்கிய நண்பராக நடிக்கிறாராம். அதேபோல் படம் முழுக்க அவருடைய கேரக்டர் பயணிக்கும் வகையில் இருக்குமாம். இப்படி விஜய்யின் நண்பனாக வரும் அர்ஜுன் ஒரு கட்டத்தில் அவருக்கு துரோகம் செய்பவராக மாறி விடுவாராம்.

அதைத்தொடர்ந்து ஏற்படும் பிரச்சனையும், அர்ஜுனனின் அதிரடி ஆட்டமுமாக கதை செல்லும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் பாட்ஷா படத்தில் வரும் ரஜினி போல் விஜய்யும், சரண்ராஜ் போல் அர்ஜுனும் நெருக்கமாக இருப்பது போல் காட்சிகள் படமாக்கப்படுகிறதாம். இதில் சிறு வித்தியாசம் என்னவென்றால் பாட்ஷா படத்தில் நண்பர்கள் இருவரும் இறுதிவரை நட்புடனே இருப்பார்கள்.

Also read: இறுதிக்கட்ட படப்பிடிப்பில் லியோ.. அர்ஜுனுடன் சம்பவத்தை முடித்த விஜய்

ஆனால் இதில் இயக்குனர் சில மாறுதல்களை ஏற்படுத்தி இருக்கிறார். இப்படி ஒரு தகவல் தான் மீடியாவில் கசிந்து வருகிறது. இதை வைத்து பார்க்கும் போது மங்காத்தா திரைப்படத்திற்கு பிறகு அர்ஜுன் இதில் கில்லி போல் சொல்லி அடிக்க தயாராகி இருக்கிறார் என்பது மட்டும் தெரிகிறது.

ஏற்கனவே இப்படம் ஹாலிவுட் பட சாயலை தழுவி எடுக்கப்படுகிறது என்ற ஒரு தகவல் இருந்து வந்தது. ஆனால் இப்போது பாட்ஷா பட சாயலில் லியோ இருக்கும் என கூறப்படுவது ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்திருக்கிறது. இருப்பினும் லோகேஷ் இது எல்லாவற்றிற்கும் மேலான ஒரு ட்விஸ்ட்டை படத்தில் வைத்திருப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Also read: இரண்டாம் நிலை டாப் ஹீரோக்கள்.. முதல்முறையாக 100 கோடி வசூலை தாண்டிய ஐந்து படங்கள்

Trending News