வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

மீண்டும் வில்லன் அவதாரம் எடுக்கும் ஆக்ஷன் கிங்.. அர்ஜுனுடன் மல்லுக்கட்ட போகும் முன்னணி நடிகர்

ஆக்சன் கிங் அர்ஜுன் தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருகிறார். தமிழ்ப் படங்களைத் தாண்டி மற்ற மொழி படங்களிலும் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். ஹீரோவாக பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார் அர்ஜுன்.

ஆனால் சமீபகாலமாக அர்ஜுனுக்கு ஹீரோவாக படங்கள் சரியாக அமையவில்லை. இருந்தாலும் தன்னுடைய ஹீரோ இமேஜ் போகாத அளவுக்கு வில்லத்தனத்திலும் ஹீரோயிசம் காட்டி வருகிறார்.

அதுவும் விஷால் நடிப்பில் வெளியான இரும்புத்திரை படத்தில் அனைவரையும் மிரள வைத்தார் அர்ஜுன். அந்த படம் வெற்றி அடைந்ததற்கு அர்ஜுன் தான் காரணம் எனவும் பின்னர் பத்திரிகைகளில் எழுதப்பட்டது.

அந்த அளவுக்கு அவரது வில்லத்தனம் ரசிகர்களை கவர்ந்தது. ஆனால் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ஹீரோ படத்தில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்தப் படம் சரியாகப் போகவில்லை என்றாலும் அர்ஜுனுக்கு நல்ல பெயர் கிடைத்தது.

இப்படி சமீபகாலமாக தன்னுடைய நடிப்பில் முத்திரை பதித்து வரும் அர்ஜூன் அடுத்ததாக தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு நடிக்கும் சர்க்காரு வாரிபட்டா என்ற படத்தில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம்.

மகேஷ் பாபு மற்றும் கீர்த்தி சுரேஷ் கூட்டணியில் உருவாகி வரும் இந்த படத்திற்கு நீண்ட நாட்களாக வில்லன் கதாபாத்திரத்திற்கு தேர்வுகள் நடந்த நிலையில் தற்போது இறுதியாக அர்ஜுன் தேர்வாகி உள்ளார்.

arjun-mahesh-babu-cinemapettai
arjun-mahesh-babu-cinemapettai

Trending News