வியாழக்கிழமை, நவம்பர் 28, 2024

ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட காரணம் இதுதான், ஸ்கெட்ச் போட்டது நான்தான்.. பரபரப்பு வாக்குமூலம் அளித்த ஹரிஹரன்

Armstrong murder case: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சில நாட்களுக்கு முன்பு தமாக நிர்வாகி ஹரிஹரன் கைதாகி இருந்தார். அவர் கொடுத்த பரபரப்பு வாக்குமூலம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் அதிர செய்திருக்கிறது.

ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட நாள் என்று சரணடைந்த 11 பேரும் ஆற்காடு சுரேஷ் கொலைக்காக பழிவாங்கும் படலத்தில் கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்திருந்தனர். ஆனால் தற்போது ஹரிஹரன் மூலம் மொத்த உண்மையும் வெளியாகி இருக்கிறது.

பரபரப்பு வாக்குமூலம் அளித்த ஹரிஹரன்

ஏற்கனவே வடசென்னை ஸ்க்ரப் தொழில் செய்வதில் சம்போ செந்திலுக்கு ஆம்ஸ்ட்ராங் உடன் முன் விரோதம் இருந்திருக்கிறது. சம்போ செந்தில் மற்றும் ஹரிஹரன் இருவருக்கும் நெருக்கமான நட்பு இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

மேலும் கைதான அதிமுக நிர்வாகி மலர் கொடியின் மகன் ஹரிஹரனின் நெருங்கிய நண்பர். இதன் மூலம் அடிக்கடி மலர் கொடி வீட்டிற்கு சென்று வரும்போது, திமுக நிர்வாகி அருள் என்பவருக்கும் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய வேண்டும் என்ற திட்டம் இருப்பதை ஹரிஹரன் தெரிந்து கொண்டிருக்கிறார்.

இந்த அருள் தான் ஆர்காடு சுரேஷின் மைத்துனர். மேலும் சில ரவுடிகளுக்கும் ஆம்ஸ்ட்ராங் உடன் முன் விரோதம் இருந்திருக்கிறது. இது பற்றி செந்திலுக்கு ஹரிஹரன் தகவல் கொடுத்திருக்கிறார். செந்தில் மீது பல வழக்குகள் இருப்பதால் அவர் தலைமறைவாக வசித்து வருகிறார்.

அவ்வப்போது வாட்ஸப் கால் மூலமாகத்தான் ஹரிஹரனிடம் பேசுவாராம். இந்த முன் விரோத பகையின் காரணமாக ஆம்ஸ்ட்ராங் மீது கொலை வெறி தாக்குதல் நடத்த நிறைய பேர் காத்திருப்பதை செந்திலுக்கு ஹரிஹரன் தெரிவித்திருக்கிறார்.

இந்த ரவுடிகள் மற்றும் கூலிப்படைகளின் துணையை வைத்து தான் பிளான் பண்ணி, பொண்ணை பாலு மூலம் இதை நடத்த ஹரிஹரனுக்கு செந்தில் திட்டம் தீட்டி கொடுத்திருக்கிறார். திட்டப்படி இவர்களும் ஆம்ஸ்ட்ராங்கை படுகொலை செய்திருக்கிறார்கள்.

- Advertisement -spot_img

Trending News