புதன்கிழமை, ஜனவரி 15, 2025

தர்ஷாவுக்கு சொம்பு தூக்கி நாரதர் வேலையை பார்த்த அர்னவ்.. ஆண்கள் அணியிடம் கருப்பு ஆடாக இருக்கும் பிளேபாய்

Bigg Boss 8 Tamil Arnav Dharsha: பிக் பாஸ் வீட்டில் ஒவ்வொரு நாளும் கலவரம், பூகம்பம் ஏதாவது வெடிக்கும் என்று பார்த்தால் தினமும் புஸ்வானம் போல சண்டை மட்டுமே போடுகிறார்கள். இது என்னடா பிக் பாஸ்க்கு வந்த சோதனை என்பதற்கு ஏற்ப ரவிந்தர் போனதற்கு பிறகு பெருசாக எதுவும் சுவாரஸ்யம் இல்லாமல் போய்விட்டது. ஆனாலும் சின்ன சின்ன சண்டை சச்சரவுகளை பெருசாகி அதன் மூலம் குளிர் காய வேண்டும் என்று சில போட்டியாளர்கள் விளையாடி வருகிறார்கள்.

அந்த வகையில் ஆண்கள் டீமில் இருக்கும் எட்டுப் போட்டியாளர்களில் முத்துக்குமரன் தான் ஓவராக அனைவரையும் ஆட்டிப்படைத்து வருகிறார். தான் இப்படி தான் நடந்து கொள்கிறேன் என்பதை காட்டிலும் மற்றவர்களும் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று முத்துக்குமாரின் தனிப்பட்ட கருத்தை திணித்து வருகிறார். அத்துடன் பெண்கள் அணியை வச்சு செய்யும் அளவிற்கு தொந்தரவுகளையும் தொடர்ந்து கொடுத்து வருகிறார்.

இதனால் பெண்கள் அணியிடம் வில்லனாக முத்துக்குமார் இருக்கிறார். அத்துடன் மக்களிடமும் எடுத்த கொஞ்ச நஞ்ச பெயரையும் கொஞ்சம் கொஞ்சமாக கெடுத்துக் கொண்டு வருகிறார். இன்னொரு பக்கம் ஆண்களிடம் இருந்த ஒற்றுமை தற்போது இல்லாமல் போய்விட்டது. அதற்கு காரணம் இவர்கள் அணியில் ஒரு பெண் போட்டியாளர் வந்து குட்டையை குழப்புகிறார் என்பதற்கு ஏற்ப தர்ஷா அவருக்கான வேலையை சரியாக செய்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள் ஒரு கலவரம் வெடித்திருக்கிறது. அதாவது தர்ஷா, பெண்கள் அணியை சேர்ந்திருப்பதால் அவரை முழுமையாக நம்ப வேண்டாம் என்று ஆண்கள் அணியில் முடிவெடுத்து இருக்கிறார்கள். அந்த வகையில் முக்கியமான விஷயங்களை பற்றி டிஸ்கஸ் பண்ண வேண்டாம். எப்படி தீபக்கை பெண்கள் அணி ஒதுக்கி வைத்திருக்கிறார்களோ அதே மாதிரி நாமும் தர்ஷாவை ஒதுக்கி வைக்கலாம் என்று விஷால், அருண், முத்துக்குமார் போன்ற போட்டியாளர்கள் சேர்ந்து முடிவு எடுத்திருக்கிறார்கள்.

அப்படி முடிவு எடுக்கும் பொழுது அங்கே அர்னவ் இருந்திருக்கிறார். ஆனால் இதை அப்படியே பெண்கள் அணியிடம் அர்னவ் போய் சொல்லி நாரதர் வேலையை பார்த்திருக்கிறார். உடனே தர்ஷா, உங்கள் அணியில் இருக்கும் பொழுது நீங்கள் என்னிடம் பேசாமல் எனக்கு மெண்டல் டார்ச்சர் கொடுத்தால் நான் எப்படி சகித்துக் கொண்டு இருப்பேன். இது ஒரு போட்டியாக தானே இருக்கிறது அதையும் தாண்டி ஒவ்வொருவருக்கும் மனிதாபிமானம் ரொம்ப முக்கியமானது.

ஆனால் அதையெல்லாம் நீங்கள் மறந்து என்னை ஒதுக்க வேண்டும் என்று முடிவு பண்ணி வைத்திருப்பது சரியா என்று கேள்வி கேட்கிறார். பிறகு விஷால் என்ன நடந்தது ஏன் இப்படி சொல்கிறாய் என்று கேட்கும் பொழுது நீங்கள் அனைவரும் சேர்ந்து முடிவு எடுத்ததை பற்றி அர்னவ் சொல்லிவிட்டார் என்று சொல்லிய பொழுது ஆண்களிடம் மிகப்பெரிய பிரச்சனை வந்துவிட்டது.

அந்த வகையில் விஷால், அருண், முத்துக்குமார் அனைவரும் சேர்ந்து அர்னவ்-விடம் நாங்கள் பேசியது உனக்கு விருப்பம் இல்லை என்றால் அந்த நிமிடமே எங்களிடம் சொல்லி இருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு எங்களிடம் ஒற்றுமையாக இருப்பது போல் எல்லாத்தையும் கேட்டுட்டு அப்படியே பெண்களிடம் போய் சொல்வது எந்த விதத்தில் சரியாக இருக்கும் என்று கேள்வி கேட்கிறார்கள்.

அத்துடன் அருண், நீ என்ன பெண்கள் அணிக்கு சிங்சாங் அடிக்கிறியா, டபுள் கேம் விளையாடுறியா என்று கேள்வியை கேட்கிறார். இதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாமல் அர்னவ் முழிக்கிறார். அந்த வகையில் எப்போதுமே அர்னவ்க்கு பெண்கள் அணி மீது ஒரு கண் இருக்கிறது என்பதற்கு ஏற்ப ஆண்கள் அணியிடம் கருப்பு ஆடாக இருந்து பெண்களிடம் நல்ல பெயர் எடுப்பதற்கு பிளேபாயாக இருக்கிறார்.

Trending News