தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் என்றால் அது ஷங்கர் தான். ஏனென்றால் இவர் இயக்கும் ஒவ்வொரு படமும் வித்தியாசமான கதைக் களத்தையும் பிரம்மாண்டத்தையும் கொண்டிருக்கும். இதன் காரணமாக வளர்ந்து வரும் ஒவ்வொரு நடிகரும் ஷங்கரின் இயக்கத்தில் ஒரு படமாவது நடிக்க வேண்டுமென்பதை தங்களது லட்சியமாகக் கொண்டுள்ளனர்.
அதேபோல் ஷங்கரின் இயக்கத்தில் உருவாகும் திரைப்படங்களை பார்ப்பதற்காக தனி ரசிகர் பட்டாளம் இருந்துவருகிறது. இந்த நிலையில் தற்போது இயக்குனர் ஷங்கர் மீது பிடிவாரன்ட் உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதாவது 2010-ம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் வெளியாகி மெகா ஹிட்டான படம் தான் எந்திரன். இந்தப் படத்தின் கதையானது, கதாசிரியர் ஆரூர் எழுதிய ஜூகிபா என்ற கதையில் இருந்து திருடப்பட்டது என்று மீது காப்புரிமைச் சட்டத்தின் கீழ் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது.
மேலும் ஷங்கரும் தயாரிப்பு நிறுவனமும் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய பல முயற்சிகள் எடுத்தும், அவை அனைத்தும் வீணானது.
இந்த நிலையில் தற்போது ஷங்கரை வருகின்ற பிப்ரவரி 19ஆம் தேதி விசாரணைக்கு வருமாறு சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது என்ற தகவல்கள் தற்போது கிடைத்துள்ளன.
மேலும் இதுவரை வழக்குத் தொடுக்கப்பட்ட 11 ஆண்டுகளில் ஒருமுறைகூட ஷங்கர் கோர்ட்டில் ஆஜர் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது