வியாழக்கிழமை, ஜனவரி 2, 2025

கார்த்திகை தீபம் சீரியலில் இருந்து நடிகையை தூக்கிய ஜீ தமிழ்.. விஜய் டிவி சீரியல் மூலம் என்ட்ரி கொடுக்கப் போகும் ஆர்த்திகா

Vijay Tv Serial: ஜீ தமிழ் சீரியலில் டிஆர்பி ரேட்டிங்கில் தொடர்ந்து முதலிடத்தில் பிடித்த கார்த்திகை தீபம் சீரியலில் அதிரடியாக யாரும் எதிர்பார்க்காத ஒரு விஷயம் நடந்திருக்கிறது. அதாவது கார்த்திக் மற்றும் தீபாவின் ஜோடி மற்றும் இவர்களுடைய கெமிஸ்ட்ரியை பார்ப்பதற்கு ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்தார்கள்.

அந்த வகையில் எப்படியாவது கார்த்திக், தீபாவை கண்டுபிடித்து பழைய மாதிரி மனம் ஒத்தும் தம்பதிகளாக இருக்க வேண்டும் என ரசிகர்கள் ஆசைப்பட்டனர். ஆனால் சுயநினைவுக்கு வந்த தீபா, உடம்பு சரியில்லாமல் இறந்து போவதாக காட்சிகள் காமிக்கப்பட்டு திடீரென்று சீரியலில் இருந்து அவர் கேரக்டரை தூக்கி விட்டார்.

இது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக இருந்தாலும் தற்போது கார்த்திக்கின் புது அத்தியாயத்தை காட்டும் விதமாக கிராமத்துக் கதையுடன் வித்தியாசமான ஒரு ட்ராக் ஆரம்பித்திருக்கிறது. இருந்தாலும் தீபக் கேரக்டரில் நடித்த ஆர்த்திகாவின் நடிப்பு பலரையும் கவர்ந்திருக்கிறது.

அதனால் ரசிகர்கள் ஆர்த்திகாவின் நடிப்பை மிஸ் பண்ணுகிறோம் என்று ஆதங்கத்தை கமெண்ட்ஸ் மூலம் கொட்டி வருகிறார்கள். இந்த சான்சை விஜய் டிவி மிஸ் பண்ணாமல் கொத்தாக தூக்கி விட்டது. அதாவது ஆர்த்திகாவின் நடிப்பு பலரையும் கவர்ந்த நிலையில் இன்னும் கூடிய விரைவில் விஜய் டிவியில் புது சீரியல் மூலம் கதாநாயகியாக என்டரி கொடுக்கப் போகிறார்.

அந்த வகையில் விகடன் சேனல் மூலம் புது நாடகத்தில் நடிக்கப் போகிறார். விகடன் தரப்பிலிருந்து தமிழும் சரஸ்வதியும் நாடகம் வெற்றிகரமாக போனது. இதனை தொடர்ந்து தற்போது சிறகடிக்கும் ஆசை சீரியலும் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் மூன்றாவது சீரியல் ஆக விஜய் டிவி மூலம் ஆர்த்திகா நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இன்னும் கூடிய விரைவில் விஜய் டிவி அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் வெளியிடுவார்கள்.

Trending News