அருள்மொழி வர்மனுக்கு அடுத்தடுத்து வெளிவர உள்ள 5 படங்கள்.. சோலோ ஹிட் கொடுக்க படாத பாடுபடும் ஜெயம் ரவி

தமிழ் சினிமாவில் தனது படங்களின் மூலம் தொடர் தோல்விகளை கொடுத்து வந்த ஜெயம் ரவி பொன்னியின் செல்வனில், அருள்மொழி வர்மனாக நடித்ததன் மூலம் அனைவரது கவனத்தையும் பெற்றார். மேலும் இப்படத்தில் இவருடன் சேர்ந்து சினிமாவில் பிரபலமாக இருக்கக்கூடிய முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஆனால் இவர் சோலோவாக ஹிட் கொடுக்க படாத பாடுபட்டு வருகிறார். அப்படியாக இவர் நடிப்பில் அடுத்தடுத்து வெளிவர இருக்கும் 5 படங்களை இங்கு  காணலாம்.

அகிலன்: இயக்குனர் கல்யாண் கிருஷ்ணன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள படம் அகிலன். இதில் ஜெயம் ரவி இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். படத்தில் இவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் மற்றும் தான்யா ரவிச்சந்திரன் என இரு கதாநாயகிகள் நடிக்கின்றனர். மேலும் படத்தின் பாடல் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியாக இருக்கும் அகிலன் திரைப்படம் மார்ச் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Also Read: கோமாளி படத்தின் முதல் சாய்ஸ் ஜெயம் ரவி இல்ல.. வெற்றிக்குப்பின் பிரதீப் வெளியிட்ட ரகசியம்

பொன்னியின் செல்வன் 2: இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் கல்கியின் நாவலை அடிப்படையாக வைத்து வெளிவந்த பொன்னியின் செல்வன் பான் இந்தியா படமாக வெளியிடப்பட்டது. இதன் முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியானது. இப்படத்தில் ஜெயம் ரவி அருள்மொழி வர்மனாக நடித்துள்ளார். முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் வருகின்ற ஏப்ரல் 28ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

இறைவன்: இயக்குனர் அகமத் இயக்கத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் இறைவன். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மேலும் இதில் சமூக கருத்துக்களை கொண்டு ஆக்சன்  திரில்லர் படமாக உருவாகியுள்ளது. தற்பொழுது படத்தின் பணிகளை இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. மேலும் இறைவன் திரைப்படம் ஆகஸ்ட் 28ஆம் தேதி வெளியாக உள்ளது.

Also Read: நடிகை படுத்தும் பாடு, பொன்னியின் செல்வன் 2 நடிக்க மறுக்கும் ஹீரோக்கள்.. ஆளை மாற்றும் மணிரத்தினம்

ஜெயம் ரவி 30: முதல் முறையாக இயக்குனர் எம்.ராஜேஷ் கூட்டணியில் ஜெயம் ரவி நடிக்க உள்ளார். இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார். மேலும் ஜெயம் ரவிக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் ஜோடி சேர்ந்துள்ளார். இதனைத் தொடர்ந்து நட்டி  நட்ராஜ் வில்லனாகவும், விடிவி கணேஷ் நகைச்சுவை கதாபாத்திரத்திலும் நடிக்க உள்ளனர். மேலும் இப்படம் மே மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சைரன்: இயக்குனர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் சைரன்.  இதில் இவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். மேலும் இப்படம் இந்த வருடம் மார்ச் மாதம் வெளியாக உள்ளது.

Also Read: அப்போதே பொன்னியின் செல்வனாக நான் தான் நடிப்பேன் என அடம் பிடித்த ஜாம்பவான்.. வந்தியத்தேவனையும் செலக்ட் செய்த நடிகர்