புதன்கிழமை, ஜனவரி 15, 2025

4 பாகங்களாக உருவாகும் அருள்நிதியின் படம்.. லாரன்ஸ் போல் ஆகாமல் இருந்தால் சரிதான்

Actor Arulnithi: அருள்நிதி நடிப்பில் கடைசியாக வெளியான கழுவேத்தி மூர்க்கன் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. வம்சம் படத்திற்கு பிறகு இந்த படத்தில் தான் கிராமத்து கெட்டப்பில் அருள்நிதி பட்டையை கிளப்பி இருந்தார். ஆகையால் அடுத்தடுத்து இதே போன்ற கதைகளில் அருள்நிதி நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் திடீரென வேறு முடிவு எடுத்து இருக்கிறார். அதாவது அருள்நிதி நடிப்பில் இப்போது டிமான்டி காலனி இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இந்த படத்தின் முதல் பாகம் 2015 ஆம் ஆண்டு அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகி மாபெரும் வெற்றி பெற்றது. இதை அடுத்து அருள்நிதி திரில்லர் படங்களில் தொடர்ந்து நடிக்க ஆரம்பித்தார்.

Also Read : லியோ பட நடிகைக்கு குவியும் வாய்ப்பு.. முதல் ஆளாக துண்டு போட்ட அருள்நிதி

அந்த படங்களும் ஓரளவு யாருக்கு கை கொடுத்து வந்தது. இந்த சூழலில் டிமான்டி காலனி 2 படத்தை இந்த ஆண்டு வெளியிட படக்குழு முடிவு செய்து இருக்கிறார்கள். அதோடு மட்டுமல்லாமல் இப்படத்தின் இரண்டாம் மற்றும் நான்காம் பாகங்கள் எடுக்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறார்களாம்.

மேலும் டிமான்டி காலனி முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் இன்னும் சுவாரசியமாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படம் நிச்சயம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் உள்ள நிலையில் படம் வெளியாகி ரசிகர்களின் வரவேற்புக்கு பிறகுதான் அடுத்த இரண்டு பாகங்கள் எடுப்பதை பற்றி முடிவு எடுக்க இருக்கிறார்களாம்.

Also Read : அண்ணன் எப்ப கிளம்புவான் திண்ணை எப்ப காலி ஆகும்னு இருந்த அருள்நிதி.. உச்சகட்ட ராஜதந்திரம் இதான்

இதே போல் தான் இயக்குனர் மற்றும் நடிகருமான லாரன்ஸ் முனி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து காஞ்சனா படத்தை இயக்கினார். இதைத்தொடர்ந்து அடுத்தடுத்த பாகங்கள் எடுத்த நிலையில் ரசிகர்களுக்கு அலுப்பு தட்ட ஆரம்பித்துவிட்டது. மேலும் அடுத்த அடுத்த பாகங்கள் தோல்வியை தழுவியது.

லாரன்ஸ் செய்த தவறை போல் அருள்நிதி செய்யாமல் கதையில் சுவாரசியத்தை கூட்டினால் கண்டிப்பாக டிமான்டி காலனி படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் வெற்றி பெறும் என்பதில் சந்தேகம் இல்லை. மேலும் இந்த செய்தி அறிந்த டிமான்டி காலனி பட ரசிகர்கள் எப்போது இரண்டாம் பாகம் வரும் என்ற ஆர்வத்தில் உள்ளனர்.

Also Read : சுந்தர் சி, ராகவா லாரன்ஸ் எல்லாம் ஓரமா போங்க.. பேய் பட சீசனை தொடங்கி வைக்க போகும் படம்

Trending News