Demonte Colony 2 Trailer: அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு டிமான்ட்டி காலனி படம் வெளியானது. சஸ்பென்ஸ், திரில்லர் என ஆடியன்ஸை பயத்தில் வெடவெடக்க வைத்த அப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
இன்னும் சொல்லப்போனால் பல திகில் படங்களின் வரவுக்கு இது ஒரு காரணமாகவும் அமைந்தது. அதனாலேயே இதன் இரண்டாம் பாகம் தற்போது பெருமளவில் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
அதே கூட்டணியில் மீண்டும் உருவாகி இருக்கும் இப்படம் வரும் ஆகஸ்ட் 15 வெளியாகிறது. அதே நாளில் தங்கலான், அந்தகன், ரகுதாத்தா ஆகிய படங்களும் வெளியாவதால் பயங்கர போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் டிமான்ட்டி காலனி 2 ட்ரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது.
இதன் ஆரம்பத்திலேயே முதல் பாகத்தின் இறுதி காட்சி காட்டப்படுகிறது. அதை அடுத்து அருள்நிதி அமானுஷ்யத்தின் பின்னணியில் சிக்கும் காட்சிகள் பயங்கர மிரட்டலாகவும் திகிலாகவும் இருக்கிறது.
டிமான்ட்டி காலனி 2 ட்ரெய்லர் எப்படி இருக்கு.?
டிமான்ட்டி வீட்டை விட்டு வெளியே வரும் செயின் ஒவ்வொருவரையும் பழிவாங்குகிறது. அதில் சிக்கிக் கொள்ளும் அருள்நிதி, பிரியா பவானி சங்கர் அதை அழிக்கும் வழியை தேடுகின்றனர்.
இப்படியாக வெளிவந்துள்ள ட்ரெய்லர் முதல் பாகத்தை விட இன்னும் திகில் நிறைந்ததாக இருக்கிறது. அதற்கேற்றாப்போல் மிரட்டல் பின்னணி இசையும் இருள் நிறைந்த காட்சிகளும் திகில் கொடுக்கிறது.
மேலும் எந்த ஆர்ப்பாட்டமும் அலட்டலும் இல்லாமல் நடிக்கும் அருள்நிதிக்கு இப்படம் நிச்சயம் வெற்றியாக அமையும். அந்த வகையில் திரில்லர் பிரியர்களுக்கு நிச்சயம் இப்படம் சரியான தீனியாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
திகில் அமானுஷ்யம் நிறைந்த டிமான்ட்டி காலனி 2
- தப்பிக்க முடியாத ஆபத்தான உலகத்தில் சிக்கித் தவிக்கும் ஆத்மா
- ஆகஸ்ட் 15-ஐ லாக் செய்த நான்கு படங்கள்
- அருள்நிதிக்கு நல்ல பெயர் சம்பாதித்துக் கொடுத்த 5 படங்கள்