திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

அருள்நிதியின் அடுத்த திரில்லர் கதை ஒரு விமர்சனம்.. டைரி எப்படி இருக்கு? விமர்சனம்

அருள்நிதி என்றாலே திரில்லர் என்று சொல்லும் அளவுக்கு தொடர்ச்சியாக திகில் சம்பந்தப்பட்ட கதைகளையே அவர் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். சமீபத்தில் அவரின் நடிப்பில் தேஜாவு, டி ப்ளாக் ஆகிய படங்கள் வெளியானது. அதை தொடர்ந்து தற்போது மற்றொரு த்ரில்லர் படமாக டைரி வெளியாகி இருக்கிறது.

அறிமுக இயக்குனர் இன்னாசி பாண்டியன் இயக்கி இருக்கும் இந்த படத்தில் அருள்நிதி, பவித்ரா மாரிமுத்து, கிஷோர் ஆகியோர் நடித்துள்ளனர். சில எதிர்பாராத திருப்பங்களுடன் வரும் கிளைமாக்ஸ் காட்சி படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது.

Also read:160 கோடி சோழிய முடிச்சு விட்ட விஜய் தேவரகொண்டா.. லிகர் படைத்தால் நொந்து போன ஆடியன்ஸ்

கதைப்படி பயிற்சி காவலராக இருக்கும் அருள் நிதியிடம் 16 வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு வழக்கு கொடுக்கப்படுகிறது. அதாவது ஊட்டி செல்லும் பாதையில் 13 வது கொண்டை ஊசி வளைவில் சில விபத்துக்கள் நடக்கின்றது. அதற்கு பல திகில் கதைகள் காரணமாக சொல்லப்படுகிறது.

ஆனாலும் கண்டுபிடிக்க முடியாமல் நிலுவையில் இருக்கும் அந்த வழக்கை அருள்நிதி கையில் எடுத்து உண்மை என்ன என்பதை கண்டறிய முயல்கிறார். அந்த முயற்சியில் அவருக்கு என்ன நடந்தது, அந்த மர்மங்களுக்கான விடை என்ன என்பதுதான் படத்தின் கதை.

Also read:இந்த விஷயத்தில் அண்ணனை தூக்கி சாப்பிட்ட தம்பி.. துல்லியமாக கையாளும் அருள்நிதி

திரில்லர் படங்களுக்கே உள்ள பாணியில் கதை ஆரம்பிக்கப்படுகிறது. முதல் பாதியில் சில கதாபாத்திரங்கள் மட்டும்தான் சுற்றி, சுற்றி வந்து கொண்டிருக்கிறது. அதில் அருளுக்கு ஒரு சில காட்சிகள் மட்டுமே இயக்குனர் வைத்திருக்கிறார்.

இரண்டாம் பாதிக்கு பிறகு தான் அருள்நிதி தன்னுடைய அதிரடி ஆட்டத்தை ஆரம்பிக்கிறார். அந்த வகையில் போலீஸ் கதாபாத்திரம் அவருக்கு பக்காவாக செட் ஆகிறது. முதல் பாதியில் மிகவும் மெதுவாக நகரும் கதை இடைவேளைக்கு பிறகு வேகமாக நகர்கிறது.

அதிலும் இறுதி காட்சிக்கு முன்பு வரும் 30 நிமிட காட்சிகள் பரபரப்பை கூட்டுகிறது. பின்னணி இசை, எதிர்பாராத மர்ம முடிச்சுகள் என்று படத்தில் சில விஷயங்கள் ரசிகர்களை கவர்ந்தாலும், கதையில் இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம் என்பதுதான் பலரின் கருத்தாக இருக்கிறது. அப்படி இருந்திருந்தால் இப்படம் டிமான்டி காலனி வரிசையில் இடம் பெற்றிருக்கும். இருப்பினும் திகில் பட ரசிகர்களுக்கு இந்த டைரி நிச்சயம் பிடிக்கும்.

Also read:பிரச்சனையை விலை கொடுத்து வாங்கிய அட்லி.. ஷாருக்கானால் வயிற்றெரிச்சலில் தயாரிப்பாளர்கள்

சினிமா பேட்டை ரேட்டிங்- 2.25 / 5

Trending News