வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

தப்பிக்க முடியாத ஆபத்தான உலகத்தில் சிக்கித் தவிக்கும் ஆத்மா.. கொல நடுங்க வைக்கும் டிமான்டி காலனி 2 ட்ரெய்லர்

Demonte Colony 2 Trailer: திகில் படமா கூப்பிடுங்கப்பா அருள்நிதியை என்று சொல்லும் அளவுக்கு அவர் ஹாரர் கதைகள் மீது அதிக ஆர்வம் காட்டி வருகிறார். ஒரு விதத்தில் அவருக்கு அது நன்றாகவே ஒர்க்அவுட் ஆகிறது.

அந்த வகையில் கடந்த 2015 ஆம் ஆண்டு அஜய் ஞானமுத்து இயக்கத்தில் இவர் நடித்திருந்த டிமான்டி காலனி பெரும் வரவேற்பு பெற்றிருந்தது. அதை தொடர்ந்து இந்த கூட்டணி தற்போது மீண்டும் இணைந்து இருக்கின்றனர்.

Also read: 4 பாகங்களாக உருவாகும் அருள்நிதியின் படம்.. லாரன்ஸ் போல் ஆகாமல் இருந்தால் சரிதான்

அருள்நிதிக்கு ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் நடித்திருக்கும் டிமான்டி காலனி 2 ட்ரெய்லர் இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் ஆவலுடன் காத்திருந்த ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக தற்போது ட்ரெய்லர் வெளியாகி உள்ளது.

வீடியோவின் ஆரம்பத்திலேயே முதல் பாகத்தின் கிளைமாக்ஸ் காட்சி காட்டப்படுகிறது. அதில் அருள்நிதி இறந்து போவதில் இருந்து தொடங்கும் ட்ரெய்லர் அடுத்தடுத்த காட்சிகளில் பயங்கர மிரட்டலாக இருக்கிறது. ஆபத்தான உலகத்தில் சிக்கி தவிக்கும் அருள் நிதியின் ஆத்மா வெளிவர துடிக்கிறது.

Also read: அவதார் போல டிமான்டி காலனியில் இத்தனை பாகங்களா.? புதுவிதமான ஹாரர், நெஞ்சை பதற வைத்த இயக்குனர் ஞானமுத்து

அதை தெரிந்து கொள்ளும் பிரியா பவானி சங்கருக்கு நடக்கும் அமானுஷ்யங்களும் மற்றொரு அருள் நிதியின் என்ட்ரியும் என ட்ரெய்லர் முழுவதும் சுவாரஸ்யமாக இருக்கிறது. இதில் பிக்பாஸ் அர்ச்சனா, அருண்பாண்டியன் ஆகியோரின் கதாபாத்திரங்களும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

இப்படியாக கொல நடுங்க வைத்துள்ள ட்ரெய்லர் படம் எப்போது வெளியாகும் என்ற ஆர்வத்தையும் தூண்டி இருக்கிறது. ஆனால் படகுழு ரிலீஸ் தேதியை அறிவிக்காமல் ஆடியன்ஸின் பிபியை ஏற்றி இருக்கின்றனர். ஆக மொத்தம் முதல் பாகத்தை விட பல மடங்கு திகிலாக இருக்கும் டிமான்டி காலனி 2 ட்ரெய்லர் தற்போது வைரல் ஆகி வருகிறது.

Trending News